விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படமாம் அது.. ச்ச மிஸ் ஆகிடுச்சே
சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர். இந்தச் சூழலில் விஜய்யும், அஜித்தும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் குறித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் பாதியில் படத்திலிருந்து வெளியேறினார்.
அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.
GOAT, விடாமுயற்சி: விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்திலும், அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் நடித்துவருகின்றனர். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அதன் காரணமாக அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கப்போகிறார். அஜித் இன்னும் சில காலம்தான் நடிப்பார் என்று தெரிகிறது.
சேர்ந்து நடிக்க வேண்டிய படம்: இரண்டு பேருமே தமிழ் சினிமாவின் சகாப்தங்களாக திகழ்ந்தார்கள். எனவே இன்னும் சில காலங்களில் அவர்கள் சினிமாவிலிருந்து ஒதுங்குவார்கள் என்பதால் கடைசி ஒருதடவையாவது சேர்ந்து நடிப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இருவரும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் குறித்து தெரியவந்திருக்கிறது.
அதாவது தேவயானியின் கணவர் ராஜகுமாரன் இயக்கிய படம் நீ வருவாய் என. அஜித் அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். பார்த்திபன் ஹீரோவாகவும், தேவயானி ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தச் சூழலில் நீ வருவாய் என படத்தில் முதலில் அஜித்தையும், விஜய்யையும் சேர்ந்து நடிக்க வைக்க ப்ளான் செய்திருந்தாராம் ராஜகுமாரான். அதற்கு அஜித் ஓகே சொல்லிவிட்டாராம். விஜய்க்கும் நீ வருவாய் என படத்தின் கதை பிடித்திருந்ததாம். ஆனால் அப்போது விஜய் செம பிஸியாக இருந்ததன் காரணமாக அந்தப் படத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டாராம். இந்தத் தகவலை ராஜகுமாரன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











