சொர்ணமால்யா விரித்த வலையில் சிக்காத தளபதி விஜய்.. "இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்" என செம தெளிவு!
சென்னை: பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான சொர்ணமால்யா தளபதி விஜய்யுடன் நடத்திய க்யூட்டான த்ரோபேக் பேட்டி வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதை பார்த்த தளபதி ரசிகர்கள் அப்படியே அந்த கதாபாத்திரமாகவே விஜய் மாறிவிட்டாரே என ஆச்சர்யத்தில் ஆழ்ந்து அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் ஜன நாயகன் படத்திற்கு பிறகு சினிமாவுக்கு மொத்தமாக முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப்போகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தியேட்டர் ஓனர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலருக்கும் பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, லோகேஷ் கனகராஜ், அட்லீ என பல இயக்குநர்கள் விஜய் மீண்டும் நடிக்க வந்தால் அவருக்கு நான் முதலில் கதை சொல்ல ஓடிவிடுவேன் என்று கூறி வருகின்ற்னர். விஜய்யின் த்ரோபேக் பேட்டிகளை அவ்வப்போது அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் திடீரென ஷேர் செய்து வைரலாக்கி விடுகின்றனர்.
சிரித்து சிரித்து பேசும் சொர்ணமால்யா: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே, விஜயகாந்த், பிரபுதேவா நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா மற்றும் மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான தொகுப்பாளினி சொர்ணமால்யா அந்த காலத்தில் டிடி நீலகண்டனை விட ஃபேமஸ் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரித்து சிரித்து பிரபலங்களிடம் அழகாக பேசி நைஸாக விஷயங்களை வாங்கிவிடும் தன்மை கொண்டவர். நடிகர் விஜய்யிடமும் அப்படியே சிரித்துப் பேசி கன்டென்ட் வாங்க நினைத்தவருக்கு விஜய் செம தெளிவாக கொடுத்த கவுன்ட்டர் வீடியோ தற்போது ட்விட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வலையில் சிக்காத விஜய்: திருமலை படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக இந்த பேட்டி நடைபெற்றது. அப்போது, அந்த படத்தில் சென்னை ஸ்லாங்கில் பேசி நடிச்சிருக்கீங்களே. கொஞ்சம் எங்களுக்காக பேசி காட்ட முடியுமா? படத்தின் வசனத்தை ஏதாவது சொல்ல முடியுமா என சொர்ணமால்யா கேட்டதும் இப்போது உள்ள நடிகர்கள் படத்தை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீங்க என சொல்வது போல மழுப்பாமல் சொர்ணமால்யாவுக்கும் பதில் அளித்து அவர் வலையில் விழாமலும் இருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்: திருமலை படத்தில் விஜய் லோக்கல் ஸ்லாங்கில் பேசி நடித்தது போல பேசச்சொல்லி சொர்ணமால்யா கேட்டதும், "இல்ல தெரியாமத்தான் கேக்குறேன். டிவியில ஒரு பேட்டியிலேயே படத்தோட கதை, வசனம் எல்லாம் கேட்டுட்டா எப்படி?, ஒழுங்கா தியேட்டருக்கு வந்து படத்தை பாரு" என அட்டகாசமாக பேசி அவரையும் சிரிக்க வைத்து விட்டார்.
சோ க்யூட்: நடிகர் விஜய் இப்படி செம க்யூட்டாக பேட்டி கொடுத்ததை எல்லாம் தேடிப்பிடித்து பார்த்தாலே சூப்பராக இருக்கும் போல என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஸ்வீட் பாயாக இருந்த விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவனாக மாறி கர்ஜித்து வருவதை பார்த்த ரசிகர்கள் என்னவொரு டிரான்ஸ்ஃபர்மேஷன் என்றும் ஜன நாயகன் தமிழ் சினிமாவின் மெகா இண்டஸ்ட்ரி ஹிட் படமாகவும் அமையும் எனக் கூறி வருகின்றனர். பூஜா ஹெக்டேவுடன் மீண்டும் விஜய் இணைந்து நடனமாடப் போவதையும் பார்க்க ரசிகர்கள் ரொம்பவே ஃபர்ஸ்ட் சிங்கிளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications











