எனக்கு சிகரெட் வாடையே பிடிக்காது.. விட்ருங்களேன்.. சீனியர் நடிகருக்கு அட்வைஸ் செய்த விஜய்

சென்னை: ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கும் விஜய்; இந்தப் படத்தோடு சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார். இதனையடுத்து அவரை திரையில் பார்க்க முடியாவிட்டாலும்; அரசியல் களத்தில் பார்க்கலாம் என்பதால் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் சீனியர் அனுமோகன் விஜய் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் காட்டு தீ போல் பரவிவருகிறது.

சினிமாவுக்குள் நுழைந்தபோது ஏகப்பட்ட விமர்சனங்களையும், கிண்டல்களையும் சந்தித்த விஜய்; இப்போது தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும்; வசூலில் சக்கைப்போடு போடுவதாக கூறப்படுகிறது. கடைசியாக அவர் நடித்த கோட், லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்கள் அந்த லிஸ்ட்டில்தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட் உச்சம்: விஜய்யின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். ரஜினிகாந்த்தின் படங்களைவிடவும் அவரது படங்கள் அதிகம் வசூல் செய்வதாகவும்; ரஜினிக்கு இணையான சம்பளம் வாங்குகிறார் என்றும் இன்டஸ்ட்ரியில் பேச்சு ஓடுகிறது. அதுமட்டுமின்றி தனக்கு இருக்கும் உச்ச மார்க்கெட்டை விட்டுவிட்டுத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் எனவும் தவெகவினர் தொடர்ந்து மேடையில் கூறிவருகிறார்கள்.

Vijay Concern for Health Anu Mohan Shares Heartwarming Smoking Incident
Photo Credit:

ஜனநாயகன் ரிலீஸ்: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் இன்னும் ஒருவாரத்தில் (ஜனவரி 9) ரிலீஸாகவுள்ளது. இதுவரை படத்தின் பிஸ்னெஸ் எல்லாம் சக்கைப்போடு போட்டிருப்பதாக விஜய்யின் ஆதரவாளர்கள் குரல்கள் எழுப்பிவருகிறார்கள். வசூலிலும் பெரிய வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜனநாயகனுக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி பத்தாம் தேதி ரிலீஸாவதால்; என்ன ஆகுமோ என்று தெரியவில்லை.

சிகரெட்டை வைத்து விமர்சனம்: இதற்கிடையே லியோ உள்ளிட்ட படங்களில் விஜய் சிகரெட் பிடிப்பதை வைத்து அவரை அரசியல் களத்தில் அவரது எதிர் தரப்பினர் விமர்சிப்பதும் நடந்துவருகிறது. படத்தில் மது, சிக்ரெட் பயன்படுத்தும் சீனில் எல்லாம் நடித்து இளைஞர்கள் மத்தியில் அது ஒரு மாஸான விஷயம் என நினைக்க வைத்த விஜய்; தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மக்களுக்கும் எப்படி நல்லது செய்வார் என்பதும் அவர்களது கேள்வியாக இருக்கிறது.

அனுமோகன் பேட்டி: இந்நிலையில் சீனியர் நடிகர் அனுமோகன் விஜய் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஒரு படத்தில் விஜய்யுடன் நான் நடித்தேன். அப்போது எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது விட்டுவிட்டேன். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓரமாக நின்று சிகரெட் பிடித்தேன். விஜய் என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். என் கையில் சிகரெட் இருப்பதை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டார். என்ன தம்பி என்னாச்சு என்று கேட்டேன். இல்லை அண்ணா நீங்கள் சிகரெட் பிடிக்கிறீர்கள் என கூறினார்.

பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன். இல்லை எனக்கு அந்த சிகரெட் வாடையே பிடிக்காது. அது உடல்நலத்துக்கு கேடு. நீங்களும் இதை விட்டுவிடுங்களேன் என சொன்னார். அவர் எனக்கு வயது குறைவானவராக இருந்தாலும்; என் உடல்நலன் மீது அக்கறை எடுத்து அதை சொன்னார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X