Vijay: சங்கீதாவை திருமணம் செய்ய கடைசி வரை சரினு சொல்லவே சொல்லாத விஜய்.. அப்புறம் எப்படி கல்யாணம் நடந்துச்சு?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார், அதை தான் கண்டுபிடித்து கண்டித்து பார்த்துவிட்டேன், ஆனாலும் அவர் நடிகையுடன் தொடர்ந்து உறவில் இருக்கிறார், எனவே விவாகரத்து வேண்டும் என்று விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சங்கீதாவுக்கும் விஜய்க்கும் இடையிலான திருமணம் எப்படி நடைபெற்றது என்பது குறித்து விஜய் பழைய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார். அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
விஜய் மற்றும் சங்கீதாவுக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கையில் விஜய் - சங்கீதா திருமணம் குறித்து விஜய் பேசியுள்ள பழைய வீடியோவில், " நான் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும் போது அங்கு வரும் வெளிநாடு வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவது வழக்கம். குறிப்பாக அவர்களுடன் பேசுவதற்கு தனியாக நேரம் ஒதுக்கி பேசுவேன். அப்படி இருக்கையில் ஒரு முறை படப்பிடிப்பு நடைபெற்ற போது சங்கீதாவை சந்தித்து பேசினேன்.

அவர் எனது தீவிர ரசிகை என்று கூறினார். அப்படித்தான் அவரைச் சந்தித்து பேசினேன். அவர்களை எனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்திருந்தார்கள். அதன்படி அவர்களும் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வந்து சென்ற பின்னர் எனது அப்பா என்னை நோக்கி, " சங்கீதா குறித்து என்ன நினைக்கிறாய்? உனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டார். நான் உடனே நல்ல பொண்ணு என்று கூறினேன். அடுத்ததாக, நீ சங்கீதாவை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது என்று கூறினார்.
உங்க இஷ்டம்: நான் இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேண்டும் என்று கூறினேன். அடுத்ததாக நான் உங்க இஷ்டம் என்று கூறிவிட்டேன். ஆனால் இப்போதே திருமணம் செய்து கொள்ள முடியாது, சினிமாவில் தான் எனது முழு கவனமும் உள்ளது. எனவே எப்படியும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என்று கூறினேன்.

பெற்றோரின் மகிழ்ச்சி: அவர்கள் அடுத்ததாக லண்டன் சென்று நிச்சயம் மாதிரி செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். நான் அதற்கும் உங்கள் இஷ்டம் என்று கூறிவிட்டேன்" என்று அந்த வீடியோவில் கூறுகிறார். அதன் பின்னர் தான் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் பெற்றோர்களை மகிழ்விக்க தான் தான் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











