Vijay: அப்பா அம்மா சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்.. ரசிகர்களுக்கு விஜய் ஸ்பெஷல் அட்வைஸ்

சென்னை: நடிகர் விஜய் எப்போதுமே தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டே தான் இருப்பார். அதுவும் தான் வளர்ந்து வந்த காலங்களில் அவர் கொடுத்த பேட்டிகளில் பலவற்றிலும் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதேபோல் சமீப காலமாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் பேசும் போது சொல்லும் குட்டிக் கதைகள் மூலம் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்கிறார். இப்படி இருக்கையில் அவரது மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், திருமணம் குறித்தும் வாழ்க்கைத் துணை தேர்வு குறித்தும் விஜய் தனது ரசிகர்களுக்கு அவரது பழைய பேட்டியில் அளித்த அட்வைஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது அவரது பேட்டியில், " நான் நைட்டோட நைட்டா ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட்டால் நீங்க சொல்லலாம். எனது அப்பா அம்மாவை எதிர்த்து நான் திருமணம் செய்து கொண்டால் என்னை நோக்கி கேள்வி எழுப்புவது என்பது சரியானது. எங்க அம்மா அப்பா பார்த்து வைத்த பெண்ணை நான் திருமணம் செய்துள்ளேன், அதில் எந்த தப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

Vijay Marry the Girl Your Parents Choose Vijay s Old Advice Trends Amid Divorce Controversy

திருமணம்: நான் எனது ரசிகர்களுக்கு கூட சொல்லிக்க விரும்புகிறேன். அம்மா - அப்பா பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராது என்று நான் சொல்லுகிறேன். என்னுடைய ரசிகர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் இது தொடர்பான பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நெட்டிசன்கள்: அதுவும் விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் நீதிமன்றத்தில் இன்னும் முதல் அமர்வையே எதிர்கொள்ளாத நிலையில் விஜய் தனது மனைவி சங்கீதா குறித்தும் தனது திருமண வாழ்க்கை குறித்தும் பகிர்ந்து கொண்ட பல வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சில இணையவாசிகள் இது போன்ற வீடியோக்களை பகிர்ந்து, " அப்போ இஷ்டத்துக்கு பேசி வெச்சிருக்காப்ல.. எல்லாம் trend ஆகிட்டு இருக்கு இப்போ " என்று விஜய்யை கலாய்த்து வருகிறார்கள். மேலும் விஜய்யின் மனைவி சங்கீதா ஒரு யூடியூப் சேனலுக்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேட்டி அளித்திருப்பதாகவும், அந்த பேட்டி விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Vijay Marry the Girl Your Parents Choose Vijay s Old Advice Trends Amid Divorce Controversy

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X