திருமணத்துக்கு பின் சங்கீதா அப்படியே விட்டுட்டாங்க.. மனைவி பற்றி விஜய் ஓபன்.. என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும்; அவர் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா கடந்த மாதம் இறுதியில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவரது குற்றச்சாட்டுக்களை நம்புவதா வேண்டாமா என தவெகவினர் உச்சக்கட்ட குழப்பத்துக்கு ஆளாகி; கடைசியில் அவரையே தரக்குறைவாக பேசினார்கள். ஆனால் அத்தனைக்கும் விஜய் அமைதியாகவே இருந்து மேற்கொண்டு அதிர்ச்சியை கொடுத்தார்.
விஜய்யின் மனைவியான சங்கீதா கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "விஜய்யிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும். அவரும் நானும் கடந்த ஐந்து வருடங்களாகவே பிரிந்து வாழ்கிறோம். அவருக்கும் ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. அதை கண்டுபிடித்து நான் தட்டிக்கேட்டேன். அப்போதிருந்து அவர் என்னை வெளியே சுதந்திரமாக நடமாடவில்லை. பொருளாதாரத்திலும் கட்டுப்பாடுகள் விதித்தார். நடிகையும் எனது கணவரும் சேர்ந்து அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.

குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் அசிங்கம்: அப்படி வெளிநாடு சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அந்த நடிகை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தார். அது எனது குடும்பத்துக்கும், பிள்ளைகளுக்கும் அவமானமாக இருந்தது. அந்த நடிகையுடனான உறவை முறித்துக்கொள்வதாக கூறினார். ஆனால் அவரது செயல்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பொது நன்மதிப்பு கருதி நடிகையின் பெயரை சொல்லாமல் இருக்கிறேன். வேண்டுமென்றால் அந்த நடிகைக்கு எதிரான ஆதாரத்தை கொடுப்பேன். அவரையும் இரண்டாவது எதிர்மனுதாரராக சேர்ப்பேன்" என பெரிய குண்டை தூக்கி போட்டிருந்தார்.
கண்டுகொள்ளாத விஜய்: அவரது இந்த குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் பாதுகாப்பு பற்றி அவ்வளவு பேசும் விஜய் தனது மனைவியிடம் இப்படி மிருகத்தனமாக நடந்திருக்கிறாரே என்று பலரும் கண்டனங்களை தெரிவித்தார்கள். மேலும் சங்கீதாவுடன் அவர் சேர்ந்து வாழ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் விஜய்யோ எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு; திடீரென ஒரு கூட்டத்தில், 'இந்தப் பிரச்னையெல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாது' என அசால்ட்டாக பேசியது குறிப்பிடத்தக்கது.
சங்கீதாவின் இன்னொரு மனு: முதல் மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே இன்னொரு மனுவையும் தாக்கல் செய்தார் சங்கீதா. அந்த மனுவில், 'லண்டனில் குடியுரிமை பெற்றிருக்கும் எனக்கு சென்னையில் தங்குவதற்கு வீடு இல்லை. நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கு எனக்கு அவர் அனுமதியளிக்கவில்லை. எனவே அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்தும் அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். சங்கீதாவின் விவாகரத்து மனு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ட்ரெண்டாகும் விஜய்யின் பேட்டி: இந்நிலையில் சங்கீதா பற்றி விஜய் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், "திருமணமான புதிதில் சங்கீதா எனக்காக நிறைய கிஃப்ட்டுகள் எல்லாம் வாங்கி தருவார். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே அதை விட்டுவிட்டார். இவருக்கு செய்வது வேஸ்ட் என நினைத்து நிறுத்திவிட்டார். இப்போது எதுவுமே செய்வதில்லை. என்னை ரொம்பவே புரிந்திருக்கிறார். எனது படம் பற்றி ஓபனாக சொல்லிடுவார். சங்கீதா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். என் வாழ்வின் அனைத்திலும் அவருடைய பங்கு நிறைய இருக்கிறது"என்றிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சங்கீதாவை பற்றி எவ்வளவு புரிதலோடு பேசியிருக்கிறீர்கள்; மீண்டும் சேர்ந்துவிடுங்கள் அண்ணா என கோரிக்கை வைக்க தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications















