Meena On Vijay - என்னை விட அஜித்தானே ரொம்ப பிடிக்கும்.. மீனாவிடம் ஓபனாக கேட்ட விஜய்

சென்னை: Meena On Vijay (விஜய் குறித்து மீனா) விஜய்யுடன் இணைந்து ஒரு படம்கூட கதாநாயகியாக நடிக்காத மீனாவை பார்த்து உங்களுக்கு அஜித்தைத்தானே ரொம்ப பிடிக்கும் என விஜய் கேட்டிருக்கிறார்.

நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதன் பிறகு எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக சிவாஜி, ரஜினிகாந்த் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நடித்த மீனா யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழில் ஒரு புதிய கதை படத்தின் கதாநாயகியாக அறிமுகமானர். முதல் படம் சரியாக வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்தது.

Vijay openly asked To Meena you likes Ajith more than me

முன்னணி ஹீரோயினான மீனா: கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக சோலையம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. ஒருபக்கம் என் ராசாவின் மனசிலே படம் ஹிட்; மறுபக்கம் குழந்தை நட்சத்திரம் மீனா ஹீரோயினாகிவிட்டார் என்ற ஆச்சரியம் என மீனாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

ரஜினிகாந்த், கமல் ஹாசனுடன் மீனா: அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா ரஜினியுடன் ஹீரோயினாக ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் ரஜினியுடன் நடித்த வீரா, எஜமான், முத்து ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. மேலும் ரஜினியின் ஆகச்சிறந்த ஜோடிகளில் மீனாவும் ஒருவர் என்று பெயர் எடுத்தார். அதேபோல் கமலுடன் மீனா இணைந்து நடித்த அவ்வை சண்முகி, தெனாலி உள்ளிட்ட படங்களும் ஹிட்டாகின.

பல ஹீரோக்களுடன் நடித்த மீனா: தமிழில் ரஜினி, கமல் ஹாசன் தவிர்த்து சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், அஜித் என பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். அஜித்துடன் மீனா இணைந்து நடித்த அத்தனை படங்களும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் ஜோடி சேராத மீனா: அஜித்துடன் மீனா இணைந்து நடித்தாலும் அஜித்துக்கு போட்டியாக கருதப்படும் விஜய்யுடன் மீனா ஒரு படத்தில்கூட ஜோடியாக நடிக்கவில்லை. அதேசமயம் ஷாஜகான் படத்தில் சரக்கு வெச்சிருக்கேன் இறக்கி வெச்சிருக்கேன் பாடலுக்கு மட்டும் மீனா விஜய்யுடன் நடனமாடினார். ஆனால் மீனா விஜய்யுடன் நடிக்காவிட்டாலும் அவரது மகள் நைனிகா தெறி படத்தில் நடித்திருக்கிறார்.

Vijay openly asked To Meena you likes Ajith more than me

அஜித்தைத்தானே ரொம்ப பிடிக்கும்: ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு முதலில் மீனாவுக்கு விருப்பமே இல்லையாம். ஆனால் ஆர்.பி.சௌத்ரி உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டதால் அந்தப் பாடலில் நடனம் ஆட மீனா ஒத்துக்கொண்டாராம். அதன் பிறகு தெறி ஷூட்டிங்கில் நைனிகா நடிக்கும்போது முதல் ஷாட்டிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நைனிகாவை நினைத்து மீனாவிடம் பெருமைப்பட்டாராம் விஜய்.

அந்த சமயத்தில் மீனாவிடம் விஜய், "உங்களுக்கு என்னைவிட அஜித்தைத்தானே ரொம்ப பிடிக்கும்" என்று கேட்டிருக்கிறார். ஏன் என்று மீனா கேட்க, நீங்க என்கூட ஒரு படம்கூட நடிக்கல. ஆனா அஜித்தோடு மட்டும் மூன்று படங்கள் நடித்திருக்கீங்க என்றாராம். அதற்கு உடனே மீனா, அய்யோ இல்லை விஜய் அந்த சமயத்தில் நான் ரொம்பவே பிஸியாக இருந்தேன் அதான் நடிக்க முடியவில்லை என விளக்கமளித்திருக்கிறார்.

Vijay openly asked To Meena you likes Ajith more than me

விஜய்யுடன் மீனா நடித்திருக்க வேண்டிய படங்கள்: விஜய்யுடன் மீனா ஒரு படத்தில்கூட ஜோடி போடவில்லை என்றாலும் இரண்டு படங்களில் அவர் நடித்திருக்க வேண்டியது. விஜய்யுடன் கௌசல்யா நடித்த ப்ரியமுடன் படம் மற்றும் தேவயானி நடித்த ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்களில் முதலில் மீனாதான் நடிக்க வேண்டியது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X