Vijay: "சங்கீதா லவ் பண்றது தெரிஞ்சு விஜய் ஷாக் ஆகிட்டார்” இதுவரை தெரியாத உண்மை.. ஓபன் பண்ண பிரபலம்!
சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதாவின் காதல் குறித்து கேள்விப்பட்ட விஜய், அப்படியே ஷாக்கானது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
சங்கீதா லவ் - ஷாக்கான விஜய்
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ஷாக்கான சம்பவம் குறித்து பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சரவணன் மனம் திறந்துள்ளார்.

அம்மா பொண்ணு திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சரவணன், விக்ரமன் இயக்கிய புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூர்யவம்சம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் 1996ம் ஆண்டு வெளியான பூவே உனக்காக வெள்ளி விழா கொண்டாடியது. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் சங்கீதா நாயகியாக நடித்திருந்தார். விஜய்யின் கேரியரை முதலில் மாற்றி அமைத்தது இந்தப் படம் தான்.
விஜய்யுடன் ஜோடியாக நடித்த சங்கீதாவும், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனும் தற்போது கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். பூவே உனக்காக படத்தின் ஷூட்டிங்கில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சரவணனும் சங்கீதாவும் சமீபத்தில் ஜோடியாக சேர்ந்து பேட்டிக் கொடுத்திருந்தனர். அதில் அவர்களது காதல் பற்றி தெரிந்ததும் விஜய் கொடுத்த ரியாக்ஷன் குறித்து கூறியுள்ளனர்.
சங்கீதாவை காதலிக்கத் தொடங்கியதும், இதுபற்றி விஜய்யிடம் கூறியுள்ளார் சரவணன். அதனைக் கேட்ட விஜய் அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம். மேலும், "இது எப்போன்னா நடந்துச்சு... நானும் ஷூட்டிங் ஸ்பாட்டுல தான இருக்கேன்... யாருமே சொல்லவே இல்ல.." என்பதாக கேட்டுள்ளார். அதன்பின்னர் திருப்பாச்சி பட ஷூட்டிங்கின் போது சங்கீதா பற்றி விஜய் விசாரித்ததோடு, அவரை பார்க்கவும் அழைத்து வர சொன்னதாக சரவணன் கூறியுள்ளார்.
அதேபோல், பூவே உனக்காக படம் முதல் இப்போது வரை விஜய்யின் வளர்ச்சியை பார்த்து பிரமிப்பாக இருப்பதாக சங்கீதா தெரிவித்துள்ளார். எங்கேயாவது பொது நிகழ்ச்சிகளில் விஜய்யை பார்ப்பதாகவும் அப்போது பேசிக் கொள்வோம் எனவும் நடிகை சங்கீதா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











