விஜய்யிடம் கெஞ்சிய ஷோபா சந்திரசேகர்... அம்மாவின் ஆசைக்கு நோ சொன்னது ஏன்..?

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக விஜய்யின் வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மா சென்டிமெண்ட் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருந்தது.

இந்நிலையில், விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஆசையுடன் கேட்ட ஒன்றை அவர் நிராகரித்துள்ளாராம்.

 லியோ ஷூட்டிங்கில் விஜய்

லியோ ஷூட்டிங்கில் விஜய்

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் லியோ ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிறது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறனர்.

 அம்மாவின் நீண்டநாள் ஆசை

அம்மாவின் நீண்டநாள் ஆசை

விஜய்யின் ஆரம்பகால சினிமா பயணத்தில் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தது அவரது பெற்றோர்தான். அப்பா எஸ் சந்திரசேகர், அம்மா ஷோபா இருவரும் விஜய்யின் பல படங்களை இயக்கி தயாரித்துள்ளனர். விஜய்க்கும் அவரது அம்மா மீது அதிக பாசமுண்டு. அதனால் விஜய்யின் பல படங்களில் அம்மா சென்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும். இந்நிலையில், விஜய்யின் அம்மா அவரது நீண்டநாள் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

 நோ சொன்ன விஜய்

நோ சொன்ன விஜய்

அதன்படி, ஒரு படத்திலாவது விஜய்யின் அம்மாவாக நடிக்க வேண்டும் என அவரது ரியல் அம்மா ஷோபாவிற்கு ஆசை இருந்ததாம். இதனை அவர் விஜய்யிடமே நேரில் சொன்னதாக தெரிகிறது. லியோ படத்தில் உனக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு இருந்தால் நான் நடிக்கவா என கேட்டுள்ளாராம். ஆனால், நடிக்கணும்ன்னு மட்டும் நினைச்சு பார்க்காதீங்க. ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்கள பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துடும். என்னால நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம் விஜய்.

 அம்மா சென்டிமெண்ட்

அம்மா சென்டிமெண்ட்

விஜய்யே இப்படி சொல்லிவிட்டதால் ஷோபாவும் அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டாராம். பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதில், விஜய்க்கும் அவரது அம்மாவாக நடித்த ஜெயசுதாவின் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. படங்களில் மட்டும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் விஜய், ரியல் அம்மாவின் விருப்பத்திற்கு சென்டிமெண்ட் பார்க்காமல் நோ சொல்லிவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X