சங்கீதாவுடன் விஜய்க்கு திருமணம் தோல்வி இருக்கட்டும்.. ஏற்கனவே காதல் தோல்வி தெரியுமா?.. தளபதி பாவம்தான்

சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவானது அடுத்த மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்தப் பிரச்னைகளை எல்லாம் ஏறெடுத்து கட்டிவிட்டு குடும்பத்தோடு நிம்மதியாக அவர் வாழ வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். ஆனால் அதற்கான எந்த ஸ்டெப்பையும் விஜய் எடுக்க முன்வரவில்லை என இந்த விஷயத்தில் விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

விஜய்யை ஒரு ரசிகையாக லண்டனிலிருந்து வந்து சந்தித்தவர் சங்கீதா. அவரை எஸ்.ஏ.சிக்கும், ஷோபாவுக்கும் ரொம்பவே பிடித்துப்போக; தங்களது மகன் விஜய்க்கு திருமணமும் செய்துவைத்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யத்தின் அடையாளமாக ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள். சினிமாவில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர், அழகான மற்றும் அன்பான மனைவி, பேர் சொல்ல பிள்ளைகள், வசதி, செல்வம் என அத்தனையும் கூடி விஜய்யை மகிழ்ச்சியாக வாழ வைத்துக்கொண்டிருந்தன.

Vijay s Throwback Interview on Love Life Trends Amid Divorce Case with Sangeetha
Photo Credit:

உருவான பிரச்னை: ஆனால் கடந்த சில வருடங்களாகவே விஜய்க்கும், சங்கீதாவுக்கும் ஏதோ சரியில்லை என்றே எல்லோருமே கிசுகிசுத்தார்கள். அவர்களது வாய்க்கு அவல் போடும்படி சங்கீதாவும்; கடந்த ஐந்து வருடங்களில் விஜய் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் தலைகாட்டவில்லை. எனவே அவர்களுக்குள் பிரச்னை என்பது உறுதிதான்; எப்போது வெளியே வருமோ என அஞ்சிக்கொண்டிருந்தார்கள். அதேசமயம் பொதுவெளிக்கு வராவிடாமல்; எதுவாக இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே முடித்துக்கொள்ள வேண்டுமெனவும் ஆசைப்பட்டார்கள் ரசிகர்கள்.

வீதிக்கு வந்த பஞ்சாயத்து: ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில்; சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி, 'தனது கணவருக்கும், நடிகைக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருக்கிறது. அதை தட்டி கேட்டதற்கு என்னை சுதந்திரமாக நடமாடவிடவில்லை' என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கானது விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே திரிஷாவுடன் ஜோடி போட்டு விஜய் வந்து பரபரப்பை கூட்டினார்.

Also Read
விஜய்யை விடுங்க.. தேர்தலில் களமிறங்கும் சுந்தர்.சி.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. என்ன சின்னம்?
விஜய்யை விடுங்க.. தேர்தலில் களமிறங்கும் சுந்தர்.சி.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. என்ன சின்னம்?

தேர்தல் நேரத்தில்: சங்கீதாவின் விவாகரத்து மனு மற்றும் குற்றச்சாட்டையே தாங்க முடியாமல் பொருமினர் தவெகவினர். அப்படிப்பட்ட நிலைமையில் திரிஷாவுடன் வேறு ஜோடியாக வந்தது; வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவைதானா என்று அக்கட்சியினரே நொந்துகொண்டார்கள். இப்போது ஒருவழியாக கொஞ்சம் அப்பிரச்னை ஓய்ந்திருக்கிறது. அதேசமயம், தேர்தல் நேரம் பார்த்து விஜய்க்கு பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்று சங்கீதா மீது விஜய்யின் தொண்டர்கள் வருத்தத்தில்தான் இருக்கிறார்கள். நல்வாய்ப்பாக அவரை தரக்குறைவாக பேசுவதை மட்டும் இப்போது சோஷியல் மீடியாவில் நிறுத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் பழைய பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.

விஜய்யின் பேட்டி: அவர் சில வருடங்களுகு முன்பு கொடுத்திருந்த பேட்டியில், "எல்லோருக்கும் நடப்பது மாதிரிதான் எனக்கும் நடந்திருக்கிறது. முதலில் நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது முதல் ஆட்டோகிராஃப் (காதல்) நடந்தது. அதற்கு பிறகு 12ஆம் வகுப்பு படிக்கும்போதும், கல்லூரி படிக்கும்போதும் ஆட்டோகிராஃப் நடந்திருக்கிறது. இப்படி பல ஆட்டோகிராஃப்களை கடந்துதான் நானும் வந்திருக்கிறேன்" என்றிருந்தார். அதை பார்த்து ரசிகர்களோ, 'தளபதிக்கு இத்தனை காதல் தோல்விகளா?' அய்யோ பாவம் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X