ஷில்பா ஷெட்டியுடன் நடனம்.. குஷியில் ரகசியமாக விஜய் பார்த்த வேலை.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்; ஜனநாயகன் படத்தோடு விலகுவதாக அறிவித்துவிட்டார். ஆனால் அந்தப் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே இணையத்தில் கசிந்துவிட்டது. இதனால் அனைவருமே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். எத்தனையோ படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவரின் கடைசி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா என்று அவரது ரசிகர்கள் நொந்து போயிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் ரகசியமாக செய்த செயல் குறித்து பார்க்கலாம்.

விஜய் இப்போது அரசியல் கட்சி தலைவராக சுழன்றுவருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்கியிருக்கும் அவரது கட்சி; வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் அவர் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவரது பேச்சும், செயல்பாடும், அவரை சுற்றி நடக்கும் விஷயங்களும் ரசிக்கும்படியாக இல்லை. சொல்லப்போனால் சினிமாவில் அவரது நடிப்பை ரசித்து லயித்த பலரும்; இந்த விஷயத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.

Vijay s Throwback Secret Call During Kushi Shoot Goes Viral Amid Jana nayagan Leak Row
Photo Credit:

சூப்பர் நடிகர்: உண்மையில் சொல்லப்போனால் விஜய் மிகச்சிறந்த நடிகர்தான். கண்ணுக்குள் நிலவு, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, காவலன் என பல படங்களில் எதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படிப்பட்ட விஜய் கமர்ஷியல் பாதையில் வந்த பிறகு ஒரே மாதிரியான டெம்ப்ளேட்டான நடிப்பையே வழங்கிவந்தார். இப்போது லீக்காகியிருக்கும் ஜனநாயகன் காட்சிகளை பார்த்த சிலரும், 'விஜய் ஒரு மாதிரி நடித்திருக்கிறார்' என்றுதான் விமர்சிக்கிறார்கள்.

குஷி விஜய்: அவரது சிறந்த நடிப்புக்கு குஷி படத்தை உதாரணமாக சொல்லலாம். அதில் ஒவ்வொரு சீனிலும் எஸ்.ஜே.சூர்யாவின் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவிரி ஸ்டைல் எல்லாம் தெரிந்தாலும் அதை அவ்வளவு நேர்த்தியாக செய்திருப்பார் விஜய். அதிலும் மாடியில் அமர்ந்து ஜோதிகாவின் இடையை பார்க்கும் காட்சிக்கு பின்னால் வரும் உரையாடல், மது அருந்திவிட்டு ஜோதிகாவின் போஸ்டரை பார்த்து பேசும் காட்சி என பல காட்சிகளில் மெர்சல் செய்திருப்பார். அதன் காரணமாகத்தான் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் குஷி ஃபேவரைட்.

Also Read
ஜனநாயகன் பட பிரச்னை.. உதயநிதி காரணமா?.. லீக்கானது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்
ஜனநாயகன் பட பிரச்னை.. உதயநிதி காரணமா?.. லீக்கானது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்

விஜய் செய்தது: இந்நிலையில் குஷி பட ஷூட்டிங்கின்போது நடந்த விஷயத்தை பார்க்கலாம். அதாவது படத்தில் வரும் மேக்கௌரினா பாடலில் விஜய்யும், ஷில்பா ஷெட்டியும் நடனம் ஆடியிருப்பார்கள். ராஜூ சுந்தர்ம் நடனம் அமைத்திருப்பார். கொல்கத்தாவில் அந்தப் பாடலின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததாம். அப்போது பிரேக்கில் தனியாக ஒரு இடத்துக்கு செல்ஃபோனை எடுத்து சென்ற விஜய், தனது நண்பர்களிடம் ஃபோன் செய்து, 'மச்சி நான் இப்போ யார்கூட டான்ஸ் ஆடிட்டு இருக்கேன் தெரியுமா?.. ஷில்பா ஷெட்டி டா' என்று குதூகலத்துடன் சொன்னாராம்.

மெகா ஹிட் குஷி: அதனை எஸ்.ஜே.சூர்யா எதார்த்தமாக கேட்டுவிட்டாராம். இதனை சூர்யா ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். முன்னதாக வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு இயக்கப்பட்ட படம் குஷி. படம் கடந்த 2001ஆம் ஆண்டு ரிலீஸாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தின் கதையை டைட்டில் கார்டிலேயே சொல்லி திரைக்கதையை ரொம்பவே கேஷுவலாக கொண்டு சென்றிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. அதை பார்த்து ஒரு இயக்குநருக்கு இவ்வளவு தைரியமா என்று ரசிகர்கள் வியந்துபோனார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X