மகன் அப்படியே செய்வான்.. ஜேசன் சஞ்சய் பற்றி விஜய் ஓபன்.. சங்கீதா பிரச்னை முடிவுக்கு வருமா?
சென்னை: விஜய்க்கும், சங்கீதாவுக்கும் பிரச்னை ஏற்பட்டு இப்போது அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏப்ரல் 20ஆ தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையே விஜய் மீது அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும்; அதன் காரணமாகத்தான் தான் இயக்கிக்கொண்டிருக்கும் சிக்மா படத்தில் இனிஷியலுக்கு கூட விஜய்யின் பெயரை பயன்படுத்தவில்லை என்ற தகவல்கள் வந்தன.
விஜய்க்கும், ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும்; கடந்த ஐந்து வருடங்களாகவே அவர் என்னை பிரிந்துதான் வாழ்கிறார். எனவே விவாகரத்து வழங்க வேண்டும் என சங்கீதா கடந்த மாதத்தில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது அந்த மனுவும், குற்றச்சாட்டும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. அவர் அப்படி மனு செய்த பிறகு சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக திருமணத்துக்கு வந்து மேற்கொண்டு சலசலப்பை கூட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் நிலைமை: விஜய்க்கும், சங்கீதாவுக்கும் ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். மகன் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து சிக்மா படத்தை இயக்கிவருகிறார். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. மகள் சாஷாவை பொறுத்தவரை தெறி படத்தின் க்ளைமேக்ஸில் ஒரு சீனில் மட்டும் தோன்றியிருந்தார். அதற்கு பிறகு கேமராவில் தலை காட்டாத அவர் முழுக்க முழுக்க படிப்பில் கவனம் செலுத்திவருகிறார். சமீபத்தில்தான் லண்டனில் அவர் பள்ளி படிப்பை முடித்ததாக தெரிகிறது.
அண்ணன் ப்ரெசண்ட்; அப்பா ஆப்சென்ட்: சில வருடங்களுக்கு முன்பு சாஷா தனது பள்ளியில் பட்டம் பெற்றார். அதற்குகூட விஜய் செல்லவில்லை. அதேசமயம் அண்ணன் ஜேசன்; தந்தை ஸ்தானத்தில் கலந்துகொண்டு சாஷாவை வாழ்த்தினார். அந்த வீடியோகூட சில வாரங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது. மகள் தொடர்பான விஷயத்துக்குகூட ஒரு அப்பாவாக விஜய் செல்லவில்லையே என்று பலரும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதுமட்டுமின்றி ஜேசன் மட்டுமின்றி சாஷாவும் தாயுடன் இருக்கவே விரும்புகிறாராம்.
இனிஷியலுக்கு கூட இல்லை: அதேபோல் சிக்மா படத்தில் இயக்குநர் என்ற இடத்தில் ஜேசன் சஞ்சய். எஸ் என்றே குறிப்பிட்டிருக்கிறார். இனிஷியலுக்கு கூட தனது தந்தை பெயரை அவர் பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. மேலும் ஜேசனுக்கும், விஜய்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்; இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சென்னை அசோக் பில்லரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜேசன் பற்றி விஜய் பேசிய த்ரோபேக் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்யின் பேச்சு: அவர் சில வருடங்களுக்கு முன்பு நடந்த லாரன்ஸின் பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய விஜய், "எனது மகன் ஜேசன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் லாரன்ஸ் மாஸ்டரின் தீவிரமான ரசிகர்கள். காஞ்சனா படத்தில் வரும் இரண்டு, மூன்று சீன்களை லாரன்ஸ் செய்வது மாதிரியே எனது மகனும் செய்வார். அதை நான் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன். மாஸ்டருக்கு ஒரு நாள் கண்டிப்பாக அதை போட்டு காட்டுவேன். என்னுடைய லக்கியான டான்ஸ் மாஸ்டர் என்றால் அது லாரன்ஸ்தான்" என்றிருந்தார். இதை பார்த்த ரசிகர்களோ, மகன், மகள் என சந்தோஷமாக இருந்துவிட்டு இப்போது ஏன் இந்த பிரிவில் உறுதியாக நிற்க வேண்டும். பிள்ளைகளுக்காகவாவது சங்கீதா பிரச்னையை விஜய் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications















