பெண்கள் மத்தியில் நடனம்.. விஜய் எவ்வளவு ஹேப்பியா இருந்திருக்காரு பாருங்க.. செம சூப்பரா இருக்கே!
சென்னை: நடிப்பிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். அந்தத் துறை போல் இது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆயினும் எளிதாக்கி கொள்வதற்கான அத்தனை வேலைகளையும் செய்துவருகிறார். நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்று தனக்கான செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவிருக்கிறார். அதேசமயம் தோல்வி பயத்தினால்தான் அவர் திருச்சி கிழக்கு தொகுதியிலும், பெரம்பூர் தொகுதியிலும் நிற்கிறார் என விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
நடிப்பில் செம பிஸியாக இயங்கிவந்த விஜய்; நீண்ட நாட்களாக எதிர்பார்த்தபடி அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியதும் கண்டிப்பாக திமுகவை அனுசரித்து செல்வார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். அவரோ அவர்களுக்கு கப் ஐஸ் அடிக்கும் விதமாக திமுகவை கடுமையாக சாடிவிட்டார். ஆரம்பத்தில் இப்படி இருப்பார் போகப்போக சரியாகிவிடும் என்றுதான் உடன்பிறப்புகள் நினைத்தார்கள். அவரோ திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என ஓபனாக பேசிவிட்டார்.

சுற்றிலும் பிரச்னைகள்: இவர் திமுகவை சாடி பேசுகிறார். மறுபக்கம் ஆதவ் அர்ஜுனாவோ ரஜினியை வம்பிழுத்து வைத்தார். இதையெல்லாம் தாண்டி விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவாகரத்து வேறு கோரியிருக்கிறார். தொடர்ச்சியாக பிரச்னைகளை சந்தித்துவரும் தவெக தலைவர்; என்ன விலை கொடுத்தாவது கோட்டைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று கங்கனம் கட்டியிருக்கிறார். அதற்காக அவர் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
வெற்றி வாய்ப்பு எப்படி?: திருச்சி கிழக்கை பொறுத்தவரை கிறிஸ்தவ வாக்குகள் அதிகம் இருந்தாலும் இனிகோ இருதயராஜுக்கு சாதகமான சூழல் நிலவுகிறதாம். அதேசமயம் அந்தத் தொகுதியில் கல்லூரி மாணவ, மாணவரிகள் வாக்குகளும் கணிசமாக இருக்கிறது என்றும்; அது அப்படியே விஜய்க்கு செல்லும் எனவும் கருதப்படுகிறது. பெரம்பூரோ முழுக்க முழுக்க திமுகவின் கன்ட்ரோலில் இருக்கிறது. ஒருவேளை பெரம்பூரில் மட்டும் விஜய் வென்றுவிட்டால் அது அவருக்கு கூடுதலான உற்சாகத்தை கொடுக்கும்.
விவாகரத்து மேட்டர்: ஆனால் அவ்வளவு எளிதாக பெரம்பூரில் திமுகவினர் விட்டுக்கொடுத்துவிடமாட்டார்கள். இப்படி அவரை சுற்றி இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது விவாகரத்து விஷயம்தான். பொதுவாக தமிழ்நாட்டு பெண் ரசிகைகள் பெரும்பாலானோர் விஜய்யை தங்கள் அண்ணன் ஸ்தானத்தில்தான் வைத்திருக்கிறார்கள். இப்போது சங்கீதா போட்டிருக்கும் குண்டு அந்த இமேஜை டேமேஜ் ஆக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவெல்லாம் இவருக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் விஜய்யின் பழைய வீடியோக்கள் எல்லாம் திடீரென ட்ரெண்டாகின்றன. தற்போது பரவியிருக்கும் இந்த வீடியோவில், பெண் ரசிகைகள் மத்தியில் விஜய் காவலன் படத்தில் இடம்பெற்ற ஸ்டெப் ஸ்டெப் பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடியிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்களோ தளபதி எந்தக் கவலையும் இல்லாமல் பயங்கர ஜாலியாக இருந்திருக்கிறார். இப்போது அரசியலுக்கு வந்து ஏகப்பட்ட அழுத்தங்களை சந்தித்துவருகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்து அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















