ஹலோ டாடி எப்போ வீட்டுக்கு வரீங்க?.. விஜய்யிடம் கேட்ட மகள் சாஷா.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஹெட்லைன்ஸாக இருக்கும் விஷயங்களில் ஒன்று விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம்தான். செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் எக்கச்சக்கமான புகார்களோடு கூடிய விவாகரத்து மனுவை சங்கீதா தாக்கல் செய்திருக்கிறார். ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கானது விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் விஜய் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று கருதப்படுகிறது. எப்படியாவது இரண்டு பேரும் மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கோரிக்கை.
விஜய் மீது சங்கீதா குற்றச்சாட்டுக்களை வைத்ததோடு மட்டுமின்றி அவரிடமிருந்து விவாகரத்து கேட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த விவாகரத்தைவிடவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்த விஷயங்கள்தான் அதிர்ச்சியை கொடுத்தான். பெண்கள் மத்தியில் விஜய்க்கென்று எப்போதும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் மனைவி சங்கீதாவின் நடவடிக்கைகள் விஜய்க்கு இருந்த அந்த இமேஜை பெரும்பாலும் சிதைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். போதாக்குறைக்கு விஜய்யும் ஒரு விஷயத்தை செய்து வைத்தார்.

என்ன செய்தார்?: அதாவது சங்கீதா குறிப்பிடும் நடிகை திரிஷாவாக இருக்குமோ என பலர் சந்தேகப்பட்ட நிலையில்; திரிஷாவுடனேயே ஜோடியாக ஒரு திருமணத்துக்கு வந்திறங்கினார் விஜய். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஐந்து படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். பல வருடங்கள் நல்ல டச்சில் இருக்கிறார்கள். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக பொதுவெளிக்கு ஜோடியாக வந்தார்கள். அதை வைத்து பலரும் அவர்களுக்குள் பற்றிக்கொண்டதாக உறுதியோடு சொல்ல தொடங்கிவிட்டார்கள்.
இதெல்லாமா கணக்கு?: விஜய் அப்படி செய்ததை அவரது தொண்டர்களே விரும்பவில்லை என்பதுதான் எதார்த்தம். என்ன நடந்தாலும் சரி தேர்தலில் இந்த விஷயங்கள் அடி கொடுக்காமல் இருந்தால் போதும் என்பதுதான் அவர்களது எண்ணமாக இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது மனைவி, மகன், மகள், அப்பா, அம்மா என அனைவருக்கும் கடன் கொடுத்ததாக கணக்கு காட்டியிருந்தார். அதை பார்த்து மேற்கொண்டு அப்செட்டானார்கள் அவர் ஆதரவாளர்கள். இதையெல்லாமா கணக்காக காண்பிப்பார்கள் என சன்னமாக புலம்பினார்கள். வெளியே எதுவும் காட்டிக்கொள்ளவில்லை.
வெறுப்பில் பிள்ளைகள்?: தேர்தல், பரபரப்பு, விமர்சனங்கள், பிரச்னைகள் என அனைத்தையும் தாண்டி விஜய்யும் சங்கீதாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் ஒருதரப்பினரின் கருத்து. ஆனால் அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஏனெனில் விஜய்யை அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் மொத்தமாகவே வெறுத்துவிட்டார்கள் என்றும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். தான் பட்டம் வாங்கியதற்கு கூட வராத தந்தையை நினைத்து மகள் ரொம்பவே வருத்தப்பட்டார் எனவும் தகவல்கள் வந்தன.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. வேட்டைக்காரன் பட சமயத்தில் தனியார் சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார் விஜய். அப்போது ரசிகர்கள் அந்த ஃபோன் செய்து அவரிடம் பேசும்படி நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் மகள் திவ்யா சாஷாவும் ஃபோன் செய்தார். அப்போது அவர், 'ஹலோ டாடி' என சொல்ல; விஜய் சிரித்துக்கொண்டே, 'ஆஹா வந்துட்டியா' என கேட்கிறார். அதற்கு திவ்யாவோ, 'ஹலோ டாடி எப்போ வீட்டுக்கு வரீங்க' என க்யூட்டாக கேட்டுவிட்டு; என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாடலை பாடிவிட்டு கட் செய்தார்.


Click it and Unblock the Notifications















