நீ நல்ல பொண்ணு.. அப்படி இப்படி கேள்விப்படக்கூடாது.. செட்டில் ஆகிடு.. சங்கீதாவுக்கு அட்வைஸ் செய்த விஜய்

சென்னை: விஜய் தனது நடிப்பு பயணத்தை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவிருக்கிறது. கண்டிப்பாக எப்படியாவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் என கடுமையாக உழைக்க ஆரம்பித்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி தாக்கல் செய்திருக்கும் மனு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவர் விஜய். கடைசியாக அவர் நடித்த சில படங்கள் வரிசையாக விமர்சன ரீதியாக பலத்த அடியைத்தான் சந்தித்தன. ஆனால் வசூலில் சக்கைப்போடு போட்டதாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து சொல்வார்கள். மேலும் தளபதி தனது கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பது தவெகவினரின் பிராதன முழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் விஜய் அப்படி எல்லாம் வரவில்லை; அவர் படங்கள் சில வருடங்களாகவே தோல்வியைத்தான் சந்தித்தன என்பது ஒருதரப்பினரின் கருத்து.

Amid the Vijay Sangeetha divorce case actress Sangeetha s earlier interview comments about Vijay have resurfaced and are now trending online drawing attention during a crucial political phase

சங்கீதா குற்றச்சாட்டு: இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் களமிறங்குகிறார். அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்கள் கட்சியினர். இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் மனைவி சங்கீதா பெரிய குண்டை தூக்கி போட்டார். அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததோடு மட்டுமின்றி; அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பது பெரிய அதிர்வலைகளை தமிழ்நாட்டில் கிளப்பிவிட்டிருக்கிறது.

என்ன குற்றச்சாட்டு?: அவர் தனது மனுவில், 'நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் விஜய். எவ்வளவோ நான் சொல்லிப்பார்த்தும் அவர் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். எனவே எனக்கு விவாகரத்து வேண்டும். இந்த வழக்கு செலவுகளை விஜய் ஏற்க உத்தரவிட வேண்டும்; இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை நான் நீலாங்கரை வீட்டிலேயே தங்கிட அனுமதியளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விஜய்யின் வருமானத்துக்கு ஏற்றவாறு எனக்கு நிரந்தரமான ஜீவனாம்சம் வழங்கிட வேண்டும்' என்பன உள்ளிட்ட பல விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read
ரசிகர்களுக்கு விருந்து வைத்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்ட.. எப்படியெல்லாம் ஊட்டி விடுறாங்க பாருங்க
ரசிகர்களுக்கு விருந்து வைத்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்ட.. எப்படியெல்லாம் ஊட்டி விடுறாங்க பாருங்க

மௌனம் கலைப்பாரா விஜய்?: அவரது இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்தும், விவாகரத்து கேட்டிருப்பது குறித்தும் விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை. அநேகமாக இன்று தஞ்சாவூரில் நடக்கும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தின்போது கண்டிப்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த விஷயத்தை குறிப்பிட்டு பேசுவார் என்றும்; அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இவ்விவகாரம் ஓய்ந்துவிடும் என்பது தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சங்கீதா அளித்த ஒரு பேட்டியில் விஜய் பற்றி பேசிய விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

சங்கீதா பேட்டி: அவர் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்திருந்த ஒரு பேட்டியில், "விஜய் எனக்கு நல்ல நண்பர்.'நீ நல்ல பொண்ணு. சும்மா இங்க ஒரு லவ் அங்க ஒரு லவ்னுலாம் உன்னை பற்றி நான் கேள்விப்படக்கூடாது. திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடு. என சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் பேசுகையில் அவரிடம் அன்பான கண்டிப்பு ஒன்று இருக்கும். திடீர்னு ஃபோன் செய்து, உன்னை பற்றி இப்படி கேள்விப்பட்டேனே உண்மையா என கேட்பார். இல்லை ப்பா அதில் எல்லாம் உண்மை இல்லை என சொல்வேன். ம்ம அப்படித்தான் இருக்கணும் என்பார்.

வீட்டுக்கு சென்றோம்: பிறகு க்ரிஷ்ஷை திருமணம் செய்த பிறகு அவருக்கு ஃபோன் செய்து, 'திருமணம் செய்துகொண்டேன். உங்களை பார்க்க வர வேண்டும்' என சொன்னேன்.க்ரிஷ்ஷையும் அழைத்து வா என்று சொன்னார். சென்றோம். அப்போது பார்த்த அவர், ஜோடியாக நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள்' என வாழ்த்தினார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X