சங்கீதா என் மருமகள் இல்லை.. தோழி.. பிள்ளைகள் செம லக்கி.. விஜய்யின் தாய் ஷோபா ஓபன் டாக்

சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கேட்டிருக்கும் விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தன. இதுகுறித்து விஜய் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் தஞ்சை கூட்டத்தில் ஏதாவது சொல்வாரா என கட்சியினரும், ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

கோலிவுட்டின் சக்சஸ்ஃபுல் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்தார்கள் விஜய்யும், சங்கீதாவும். காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கிடையே பிரச்னை என கடந்த சில வருடங்களாகவே அரசல் புரசலாக தகவல் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு பேரும் அமைதியாகவே இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் சங்கீதா சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

Vijay Sangeetha Divorce Row Shoba Chandrasekhar s Throwback Video About Daughter-in-Law Trends Online
Photo Credit:

அதிர்ச்சி தந்த குற்றச்சாட்டு: அவர் வைத்தவற்றில் நடிகையுடனான உறவில் விஜய் இருந்தார் என கூறியிருந்ததை பார்த்து பலரும் உறைந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி தன்னை மனரீதியாக துன்புறுத்தினார் என்றும்; சுதந்திரமாக நடமாடவில்லை, பொருளாதார ரீதியாக முடக்கினார் என்றும் சங்கீதா கூறியது மேற்கொண்டு ஷாக்கை கொடுத்தது. கட்சி கூட்டங்களிலும், தனது படங்களிலும் பெண் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து பேசும் விஜய்; சொந்த வீட்டிலேயே கட்டிய மனைவியிடம் இப்படி நடந்திருக்கிறாரே என பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

சோஷியல் மீடியாவில் நடப்பவை: அரசியலில் விஜய்யை எதிர்ப்பவர்களுக்கு இந்த விவகாரம் வாட்டமாகிவிட்டது. தினமும் இதுபற்றியே சோஷியல் மீடியாக்களில் பேசுவது, விஜய்யை ட்ரோல் செய்வது என அவர்கள் காட்டில் மழைதான். இது ஒருபக்கம் இருக்க விர்ச்சுவல் வாரியர்ஸ் என சொல்லிக்கொண்டு தவெக கட்சியினரோ சங்கீதாவை தரக்குறைவாக பேசுகிறார்கள். அதேபோல் செய்தி நிறுவனங்களின் லோகோவை தவறாக பயன்படுத்தி ஃபேக் செய்திகளையும் வெளியிட்டுவருகிறார்கள். இதற்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.

Also Read
நீ நல்ல பொண்ணு.. அப்படி இப்படி கேள்விப்படக்கூடாது.. செட்டில் ஆகிடு.. சங்கீதாவுக்கு அட்வைஸ் செய்த விஜய்
நீ நல்ல பொண்ணு.. அப்படி இப்படி கேள்விப்படக்கூடாது.. செட்டில் ஆகிடு.. சங்கீதாவுக்கு அட்வைஸ் செய்த விஜய்

அமைதி காக்கும் குடும்பம்: சங்கீதாவை தரக்குறைவாக பேசுவதை தடுக்கும் இடத்தில் விஜய், ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய மூன்று பேருமே இதுவரை அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஷோபா, எஸ்.ஏ.சியைகூட விடுங்கள்; விஜய் உடனடியாக ஒரு ட்வீட் போட்டிருக்க வேண்டாமா என சகட்டுமேனிக்கு கேள்வி எழுப்புகிறார்கள். மாதர் சங்கமும் விஜய்யின் இந்த அழுத்தமான மௌனத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் சங்கீதா பற்றி ஷோபா பேசிய பழைய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

ஷோபா பேட்டி: அந்தப் பேட்டியில் ஷோபா, "சங்கீதா எனக்கு மருமகள் மட்டுமில்லை. பெஸ்ட் ஃப்ரெண்டும்தான். குழந்தைகள் மீது அவ்வளவு கவனமாக, பாசமாக இருக்கிறார். பிள்ளைகள் ஏதாவது கேட்டால் வீட்டில் வேலை செய்பவர்கள் இருந்தாலும் அவர்களிடம் எதுவும் செய்யாமல் தன் கைப்பட செய்துகொடுப்பார். சாதாரண தண்ணீராக இருந்தாலும் அது தன் கையால்தான் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். நல்ல தாயாக இருக்கிறார். குழந்தைகள் லக்கி என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X