இரண்டே பேருதான்.. புரிதல் தான் எல்லாம்.. மனைவி சங்கீதா பற்றி விஜய் ஓபன் டாக்
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ஏப்ரல் 20ஆம் தேதி வழக்கானது விசாரணைக்கு வரவிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க திரிஷாவுடன் ஜோடி போட்டு விஜய் வந்தது பெரிய விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே அப்படி என்ன உறவு இருக்கிறது என்று பலரும் ஓபனாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சங்கீதா; நல்லபடியாக வாழ்ந்துவந்தார். ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட சின்ன சின்ன மன கசப்புகள் நாளடைவில் வளர்ந்துவிட்டன. அதற்கு விஜய்யின் நடவடிக்கைகள்தான் காரணம் என்கிற மாதிரி தனது விவாகரத்து மனுவிலும் பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். அவர் தனது மனுவில், "நானும் விஜய்யும் கடந்த சில வருடங்களாகவே உணர்வு ரீதியாக பிரிந்துதான் வாழ்கிறோம். அவர் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்: அதனை நான் தட்டிக்கேட்டேன். கண்டிப்பாக அந்த உறவை முறித்துக்கொள்வதாக உறுதி கொடுத்தார். ஆனால் செயல்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதனையடுத்து என்னை சுதந்திரமாக நடமாடவில்லை. பொருளாதார ரீதியாகவும் கட்டுப்பாடுகள் விதித்தார். நடிகையுடனான உறவின் காரணமாக நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பொதுவெளியில் நடிகை பகிர்ந்தார். அதனால் குடும்பத்துக்கும், பிள்ளைகளுக்கும் அவமானம் ஏற்பட்டது.
வேண்டுமென்றால் சொல்வேன்: பொதுவெளியில் நன்மதிப்பை கெடுத்துவிடக்கூடாது என்பதால் அந்த நடிகையின் பெயரை சொல்லவில்லை. இந்த விஷயத்தில் கணவர் மூலம் நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரை சொல்வேன். அவர்களுக்கு எதிரான ஆதாரத்தை வழங்குவேன். வழக்கில் இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன்" என குறிப்பிட்டிருந்தார். அவரது ஒவ்வொரு குற்றச்சாட்டும் ஒவ்வொரு அணுகுண்டு மாதிரி இருந்து விஜய்யின் டேமேஜை பல தலைமுறைகளுக்கு எழுந்திருக்க விடாதபடி செய்தது.
விஜய் செய்தது: விஜய்யும் தன் பங்குக்கு அதை மேற்கொண்டு செய்தார். அதாவது அவர் இப்படி குற்றஞ்சாட்டில் சில நாட்களிலேயே நடிகை திரிஷாவுடன் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு மேட்சிங் கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு வந்தார். இதன் காரணமாக விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே இருக்கும் காதல் உண்மைதான் என்று ஓபனாக பேச தொடங்கிவிட்டார்கள். எப்படியாவது இந்த உறவிலிருந்து அவர் வெளியே வர வேண்டும் எனவும் உருகி வேண்டுகோள் வைக்கிறார்கள். அதேசமயம் விஜய் அப்படி செய்ததை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்யவும் மறக்கவில்லை. ஆனால் விஜய்யும், திரிஷாவும் இதனை ரொம்பவே கூலாக ஹேண்டில் செய்துவருகிறார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் விஜய் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. சச்சின் பட சமயத்தில் அவர் கொடுத்த பேட்டியில், "சினிமாவில்தான் காதல் என்றால் பின்னால் நின்றுகொண்டு பலர் ஆடுவார்கள். ஆனால் ரியல் வாழ்க்கையில் அப்படி இல்லை. இரண்டே பேர் மட்டும்தான். புரிதல்தான் இங்கே முக்கியம். என்னை என் மனைவி சங்கீதா புரிதலோடு காதலிக்கிறார். நானும் அவரை புரிதலோடு காதலிக்கிறேன்" என்றிருந்தார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ, 'எவ்வளவு பக்குவமான பதில். இப்போது ஏன்தான் இந்த பிரிவு முடிவுக்கு சென்றிருக்கிறார்களோ' என புலம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications















