மூன்று நேரம் அதுனாலும் ஓகேதான்.. விஜய் பற்றி சங்கீதா ஓபன்.. எவ்வளவு க்யூட் பாருங்க?
சென்னை: விஜய்க்கும், சங்கீதாவுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்னை பொதுவெளிக்கு வந்திருக்கிறது. சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனுவை விடவும்; அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள்தான் அதிர்ச்சியை கிளப்பியிருக்கின்றன. போதாக்குறைக்கு விஜய் வேறு திரிஷாவுடன் ஜோடியாக ஒரு திருமணத்துக்கு வந்துவிட்டார். அப்போதிருந்து இந்தப் பிரச்னை விஜய் - சங்கீதா - திரிஷா பிரச்னையாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் பிரபலமானவராக இருக்கும் விஜய் இப்போது அரசியலுக்கும் வந்திருக்கிறார். அரசியல் களம் என்றாலே ரொம்பவே கடினமானது என்பதை அவர் வந்த சில காலத்திலேயே புரிய வைக்கப்பட்டது. ஆனால் அவரே எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்றால் சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததுதான். கடந்த சில வருடங்களாகவே இரண்டு பேரும் பிரிந்துதான் வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் பல முறை சுமூகமான பிரிவுக்கு சங்கீதா தரப்பு முயன்றதாகவும்; அதற்கு விஜய்தான் ஒத்துவரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

பொதுவெளிக்கு வந்த சங்கீதா: இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால்தான் அவர் பொதுவெளிக்கு வந்தாராம். அதுமட்டுமின்றி விஜய்யுடன் அந்த் நடிகை தொடர்ந்து ஃபோட்டோக்கள் போட்டு வெறுப்பேற்றியதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அந்த நடிகை திரிஷாதான் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். நீங்கள் கணிக்கவெல்லாம் வேண்டாம்; இதெல்லம் உண்மைதான் என்பதற்கேற்ப திரிஷாவுடன் ஜோடியாகவும் வந்துவிட்டார் விஜய்.
என்ன முடிவு?: அது மேற்கொண்டு சங்கீதாவை ட்ரிக்கர் ஆக்கியிருக்கும் என்றே தெரிகிறது. தனக்கு வேண்டிய ஜீவனாம்சத்தை கொடுத்துவிட்டால்; டீசண்ட்டாக ஒதுங்கிவிடலாம் என்பது அந்தத் தரப்பின் வாதம். ஆனால் விஜய் தரப்போ அவர்கள் கேட்கும் பெரிய தொகையை எல்லாம் கொடுக்க முடியாது என முரண்டு பிடிப்பதாகவும் ஒரு தகவல். ஆகமொத்தம் சைலெண்ட்டாக முடியக்கூடிய பிரச்னையை விஜய் தனது வறட்டு கௌரவத்தின் காரணமாக இழுத்துக்கொண்டிருப்பதாகவும் பேச்சு ஓடுகிறது.
ஏப்ரல் 20ல் விசாரணை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கு மூன்று நாட்கள் முன்னரே ஏப்ரல் 20ஆம் தேதி விஜய்யின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. அநேகமாக அன்றைய தினம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய் ஆஜராவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் மற்றும் சங்கீதா தொடர்பான ஒரு வீடியோ மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ச்ச எவ்வளவு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என ஏக்கத்தோடு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
என்ன வீடியோ?: அந்த வீடியோவில் டைனிங் டேபிளில் விஜய் அமர்ந்திருக்க; சங்கீதா இட்லியை கொண்டு வருகிறார். உடனே விஜய்யோ, 'என்னம்மா.. இட்லியா?.. எனக்கு தோசை சாப்பிடணும் போல இருக்கு.. நானே சுடுகிறேன்' என சொல்லி தோசை சுடுகிறார். மேலும் அவர் சாப்பிடும்போது பேசிய சங்கீதா, 'தோசை மூன்று நேரமும்கூட சாப்பிடுவார். அதேபோல் பிரியாணி அவருக்கு ரொம்ப பிடிக்கும். நாளை பிரியாணி என்று சொன்னால் இன்றிலிருந்தே வயிற்றை காலியாக வைத்துக்கொள்வார்" என்றிருந்தார்.


Click it and Unblock the Notifications















