சங்கீதாவிடம் அடிக்கடி சொல்வேன்.. குடும்பமே அப்படி.. விஜய் ஓபன் டாக்.. பிறகு ஏன் இந்த முடிவு?

சென்னை: விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே நடந்த பிரச்னை உச்சக்கட்டத்தை அடைந்து விவாகரத்தில் வந்து நிற்கிறது. ஏப்ரல் 20ஆம் தேதி அந்த வழக்கானது விசாரணைக்கு வரவிருக்கிறது. சங்கீதாவுடன் விஜய் சேர்ந்து வாழ்வாரா இல்லை பிரிந்துவிடுவாரா என்பது அன்றைய தினம் தெரிந்துவிடும். இது ஒருபக்கம் இருக்க தேர்தல் வேலைகளிலும் செம பிஸியாகியிருக்கிறார். சங்கீதாவுடனான பிரச்னை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா இப்போது அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்.கடந்த சில வருடங்களாகவே இரண்டு பேருக்குள்ளும் பிரச்னைதான் ஓடியிருக்கிறது. அதை லாவகமாக மறைத்திருக்கிறார்கள். விஜய்யின் பல செயல்பாடுகளை கருத்தில் கொண்டு; சுமூகமாக பிரிந்துவிடலாம் என சங்கீதா கேட்டதாகவும்; ஆனால் விஜய்தான் அதற்கு ஒத்துழைக்கவில்லை; எனவேதான் இப்போது இந்த விஷயம் பொது வெளிக்கு வந்துவிட்டதாகவும் விவரமறிந்தவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்.

Vijay-Sangeetha Throwback Video Goes Viral Amid Divorce Case
Photo Credit:

சங்கீதாவின் குற்றச்சாட்டுக்கள்: நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா வைத்திருக்கும் குற்றச்சாட்டுதான் ஹைலைட்டே. அதனை விஜய் மறுக்கவே இல்லை. மாறாக நடிகை திரிஷாவுடன் ஜோடி போட்டு ஜாலியாக ஒரு திருமணத்துக்கு வந்தார். அதுமட்டுமின்றி தவெக பெண்கள் நிர்வாகி கூட்டத்தில் பேசிய அவர், 'அந்தப் பிரச்னை எல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை' என கேஷுவலாக கடந்து சென்றார். திரிஷாவுடனான அவரது வருகை, வொர்த் இல்லை என சொன்னது உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் அவருக்கு எதிராக கடும் அதிருப்தி அலை உருவாக காரணமாகிவிட்டது.

பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?: சரி மனைவியுடன்தான் பிரச்னை; அவர் பெற்ற பிள்ளைகள் கண்டிப்பாக அவருடன் இருப்பார்கள் என்று விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களும் தங்கள் தந்தை விஜய் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக மகன் ஜேசன் சஞ்சய்யோ தான் இயக்கும் சிக்மா படத்தில் தனது பெயருக்கு முன்பு தந்தையின் பெயரை இனிஷியலுக்குகூட பயன்படுத்தவில்லை. சங்கீதாவின் பெயரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.

Also Read
விஜய் நிஜத்தில் ஹீரோ.. 27 வருஷமா கூட இருந்த பி.டி. செல்வகுமார்.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு!
விஜய் நிஜத்தில் ஹீரோ.. 27 வருஷமா கூட இருந்த பி.டி. செல்வகுமார்.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு!

ரசிகர்களின் கோரிக்கை: இப்படி பல விஷயங்கள் விஜய்க்கு எதிராகவே இருக்கின்றன. அதற்கு தகுந்தபடிதான் அவரும் நடந்துகொள்கிறார் என்பது பலரது கருத்து. ஒருவேளை இந்தப் பிரச்னை எல்லாம் சேர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவருக்கு ஆப்பு வைத்துவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. உடைந்த இமேஜை சரி செய்ய வேண்டுமென்றால்; ஒன்று சங்கீதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும்; இல்லையென்றால் அவர் கேட்கும் ஜீவனாம்ச தொகையை கொடுத்துவிட்டு சுமூகமாக பிரிந்துவிட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அழகிய தமிழ் மகன் பட சமயத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது பேசிய அவர், பல விஷயங்களை குறிப்பிட்டார். பாடுவது பற்றி பேசுகையில், "எனக்கு பாடல்கள் பாடுவது ரொம்ப பிடிக்கும். என் அம்மா, மாமா, அம்மம்மா என குடும்பமே நன்றாகத்தான் பாடுவார்கள். அதனால் எனக்கும் ஆர்வம் வந்தது. ஆனால் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை.

எனக்கு ரொம்ப பிடித்த விஷயமே பாடல் பாடுவதுதான். அது உண்மையில் ஒரு கிஃப்ட்தன். அதுதான் எனக்கு பிடிக்கும் என்று அடிக்கடி மனைவி சங்கீதாவிடம் சொல்வேன். எனது மகன் ஜேசன் சஞ்சய் இப்போதுதான் கீ போர்டு எல்லாம் இப்போது கற்றுக்கொள்கிறான்" என்றிருந்தார். இதை பார்த்த ரசிகர்களோ, மனைவியிடம் எல்லா விஷயங்களையும் ஷேர் செய்திருக்கிறீர்கள். பிறகு ஏன் தளபதி இந்த முடிவு என நொந்துகொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X