Vijay On Suriya - நானும் சூர்யாவும் பேசமாட்டோம் - இயக்குநரிடம் விஜய் சொன்ன சீக்ரெட்

சென்னை: Vijay And Suriya (விஜய் மற்றும் சூர்யா) நானும் சூர்யாவும் பேசமாட்டோம் என விஜய் இயக்குநரிடம் சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது. இதனை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங்காக வலம் வருபவர் விஜய். அவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாள்களில் முடிவடைய இருக்கிறது. அக்டோபர் மாதம் லியோ ரிலீஸாகவிருக்கிறது. வாரிசு கொடுத்த அடிக்கு லியோ மருந்து போடும் என விஜய்யும், அவரது ரசிகர்களும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

Vijay Shares His Memories About Actor Suriya

சூர்யாவின் கங்குவா: விஜய் எப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருக்கிறாரோ அதேபோல் சூர்யாவும் இருக்கிறார். அவரும் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்துமே சிறப்பானதாக இருக்கிறது. அந்தவகையில் அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. அவர் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார். பத்து மொழிகளீல் 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாகிறது.

விஜய் - சூர்யா கூட்டணி: இப்படி தமிழ் சினிமாவில் தனித்தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருக்கும் சூர்யாவும், விஜய்யும் ஏற்கனவே இரண்டு படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். சூர்யா அறிமுகமான நேருக்கு நேர், மற்றும் சித்திக் இயக்கத்தில் வெளியான ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்கள் ஹிட்டடித்தன. நடிப்பு மட்டுமின்றி சூர்யா நடித்த பெரியண்ணா படத்தில் சூர்யாவுக்காக விஜய் ஒரு பாடலையும் பாடியிருப்பார். இப்படி இருவருமே ஆரம்பத்திலிருந்து நட்புடன் பழகிவந்தனர்.

லயோலா நட்பு: விஜய்யும், சூர்யாவும் சினிமாக்காரர்களின் வாரிசு என்றாலும் அவர்கள் கஷ்டப்பட்டே இந்த உயரிய நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே பாடப்பிரிவை (விஸ்காம்) தேர்ந்தெடுத்து படித்தவர்கள். இதன் காரணமாக சினிமாவை தாண்டிய நட்பு விஜய் மற்றும் சூர்யாவுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay Shares His Memories About Actor Suriya

ரசிகர் கேள்விக்கு விஜய் பதில்: இந்நிலையில் நேருக்கு நேர் படத்தில் சூர்யா கமிட்டானபோது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது, வாசகர் ஒருவர் விஜய்யிடம் ஒரு பத்திரிகை மூலம், நேருக்கு நேர் படத்தில் உங்களுடன் நடித்த சூர்யா பற்றி சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த சூர்யா, "நானும் சூர்யாவும் லயோலாவில் விஸ்காம் ஒன்றாகத்தான் படித்தோம்.

நானும் சூர்யாவும் பேசமாட்டோம்: நாங்கள் இருவருமே யாருடனும் அதிகம் பேசமாட்டோம். நானும் யாரிடம் அதிகம் பேசாததாலும், அவரும் யாரிடமும் அதிகம் பேசாததாலும் நாங்கள் இருவருமே நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம். நேருக்கு நேர் படத்தில் சூர்யா கமிட்டான விஷயம் நான் அவுட்டோரில் இருக்கும்போதுதான் தெரியவந்தது.

அப்போது படத்தின் இயக்குநர் வசந்த்திடம் காலேஜ்ல நானும் யாரிடமும் பேசமாட்டேன். அவரும் யாரிடமும் அதிகம் பேசமாட்டார் என சொல்லிக்கொண்டிருந்தேன்" என கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் அதிகம் பேசாவிட்டாலும் இப்போது மேடையில் இருவரும் எந்த அளவு பேசுகிறார்கள் என்பது ரசிகர்கள் அறிந்ததே. இந்தத் தகவலை பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X