அஜித்தை மனம் திறந்து பாராட்டிய விஜய்... அப்போ போட்டியெல்லாம் ரசிகர்களுக்காக மட்டும் தானா?

சென்னை: தமிழ்த் திரையுலகில் விஜய், அஜித் இருவரும் டாப் நட்சத்திரங்களாக கலக்கி வருகின்றனர்.

இருவருக்குமே மிகப் பெரிய ரசிகர்கள் இருப்பதால் விஜய், அஜித்தின் படங்கள் வெளியாகும் போது தமிழ்நாடே திருவிழாகோலம் பூண்டுவிடும்.

அதேநேரம், விஜய் - அஜித் இருவரையுமே அவர்களது ரசிகர்கள் எதிரெதிர் துருவத்தில் நிற்க வைத்து போட்டியாக பார்த்து வருகின்றனர்.

ஆனால், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக மட்டும் இல்லாமல், ஒருவரையொருவர் மனம் திறந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே

விஜய் - அஜித் இவர்கள் இருவரும் தான் இன்றைய சூழலில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள். ஒரே காலக்கட்டத்தில் திரையுலகில் அடியெடுத்து வைத்த இருவரும், ராஜாவின் பார்வையிலே படத்தில் மட்டும் இணைந்து நடித்திருந்தனர். ஜானகி சவுந்தர் என்பவர் இயக்கியிருந்த இந்தப் படம், 1995ம் ஆண்டு வெளியானது. விஜய், அஜித் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 எதிரும் புதிரும்

எதிரும் புதிரும்

ராஜாவின் பார்வையிலே படத்திற்குப் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், இருவருமே மாறி மாறி ஹிட் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகின் டாப் ஹீரோக்களாக மாறினர். விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானால், அவர்களது ரசிகர்களிடம் கடும் போட்டியே காணப்பட்டது. ஆனால், விஜய்யும் அஜித்தும் பொது இடங்களில் பார்க்கும் போது நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர்.

 அஜித் பற்றி விஜய்

அஜித் பற்றி விஜய்

இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒரேநாளில் ரிலீஸாகின. விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டும் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியானது. அதேபோல், வாரிசு, துணிவு இரண்டுமே 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டின. இதனிடையே அஜித் குறித்து விஜய் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. வில்லு படத்தில் நடித்திருந்த போது விஜய் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடன் நடிக்கும் சமகால நடிகர்கள் பற்றியும், அவர்களிடம் தனக்கு பிடித்தது குறித்தும் மனம் திறந்து பேசியிருந்தார்.

 மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

அப்போது விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என ஒவ்வொரு நடிகர்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார். அதேபோல், அஜித் குறித்து பேசிய விஜய், தனக்கு அவருடைய தன்னம்பிக்கை ரொம்பவே பிடிக்கும் என ஓபனாக கூறியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சு அப்போது ரசிகர்களிடம் மிகப் பெரியளவில் வைரலான நிலையில், இப்போதும் அஜித் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 இணைந்து நடிக்க விருப்பம்

இணைந்து நடிக்க விருப்பம்

முன்னதாக வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்தில் அஜித் கிரே ஷேடில் வில்லனாக நடித்திருந்தார். அஜித்துடன் அர்ஜுனும் முக்கியமான கேரக்டரில் நடித்தார். இந்தப் படத்தை பார்த்த விஜய், மங்காத்தா கதையை தன்னிடம் கூறியிருந்தால் அர்ஜுன் கேரக்டரில் தானே நடித்திருப்பேன் என ஓபனாக பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X