விஜய்யை ஒதுக்கிய ரஜினி.. தளபதி ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லையே.. அப்படி என்ன ஆனது?
சென்னை: ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கும் விஜய்; இந்தப் படத்தோடு திரைத்துறையிலிருந்து ஒதுங்கவிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இனிமேல் அவரை அரசியல் களத்தில் பார்க்கலாம். அவர் அரசியலுக்கு வந்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும்; சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பது உச்சக்கட்ட சோகத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார்கள். அவர்களது ஆசைப்படி சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார் விஜய். கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் பம்பரமாக சுற்றி சுழன்றுவரும் அவர்; தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுகவை டார்கெட் செய்து அடித்துவருகிறார். அரசியலில் சீனியர்களான செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டார்க்ள்.
இன்னும் ஒரு படம் மட்டும்தான்: அரசியலில் முழு கவனத்தையும் திருப்பியிருப்பதால் ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் தேர்தலின் முடிவுகளை பொறுத்து தொடர்ந்து நடிப்பதா வேண்டாமா என்பதை விஜய் முடிவு செய்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு சோகத்தைத்தான் கொடுத்திருக்கிறது.
மலேசியாவில் இசை வெளியீட்டு விழா: படமானது அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது. அதேபோல் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் டிசம்பர் 27ஆம் தேதி நடக்கிறது. இந்த விழாவுக்கு தளபதி கச்சேரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சைந்தவி, ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு என ஏராளமான பின்னணி பாடகர்களும், பாடகிகளும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விஜய் பட பாடல்களை பாடவிருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது படையப்பா பட சமயத்தில் விஜய் தனது ரசிகர்கள், ரசிகைகளை சந்தித்தார். அப்போது ரசிகை ஒருவர் படையப்பா படத்தில் உங்களை நடிக்க கூப்பிட்டார்களா என்று கேட்க; அதற்கு அவர், 'படையப்பா படத்தில் நடியுங்கள் என்று யாரும் என்னை வந்து கூப்பிடவில்லை. ரஜினியுடன் நடிக்க வேண்டும்; எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள் என்று நானேதான் கேட்டேன். அந்த வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்று பதிலளித்தார்.
ரஜினி vs விஜய்: இந்த வீடியோதான் இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது. அப்போது விஜய்க்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்; பிற்காலத்தில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு விஜய் வளர்ந்துவிட்டார். லியோ, ஜெயிலர் பட சமயங்களில் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சோஷியல் மீடியாவில் பெரிய போரே நடந்ததும்; ரஜினி காக்கா கதை சொல்ல; விஜய்யும் அதுதொடர்பாக பேச என பெரும் பரபரப்பு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











