கிசுகிசு வந்தால் இதுதான் ரியாக்ஷன்.. சும்மாலாம் விடமாட்டேன்.. செம அதிரடி காட்டிய விஜய்
சென்னை: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கடந்த மாதம்தான் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அரசியலில் களமிறங்கியிருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடும் அவர்; இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம்தான் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தனது மனைவி சங்கீதாவை விஜய் பிரிந்துவிட்டதாக சமீபமாக ஒரு கிசுகிசு பரவிவருகிறது.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 69ஆவது படத்தில் நடித்துவருகிறார் அவர். பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் கமிட்டாகியிருக்கிறார்கள். இதன் பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. குறிப்பாக விஜய்யின் கரியரில் அவருக்கு இதுதான் கடைசி படம் என தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கின்றனர்.

விஜய்யின் அரசியல்: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் போட்டியிடவில்லை. அதேசமயம் தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடவிருக்கிறது. எப்படியாவது தமிழ்நாடு அரசியலில் விஜய்யின் வீரியத்தை வளர்த்துவிட வேண்டுமென்பதில் அவரது தொண்டர்கள் குறியாக இருக்கிறார்கள்.
முதல் மாநில மாநாடு: அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடந்தது. இதில் மொத்தம் 8 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்றும்; 80 கோடி ரூபாய்வரை விஜய் இம்மாநாட்டுக்காக செலவு செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. மாநாட்டில் பேசிய விஜய் தன்னுடைய எதிரி திமுகதான் என்பதை தெளிவுப்படுத்திவிட்டார். இதனால் தமிழ்நாடு அரசியலில் புதிய விவாதங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. திமுகவினரும் விஜய்யை கடுமையாக தாக்க தொடங்கியிருக்கிறார்கள். மறுபக்கம் நாம் தமிழரும் தவெகவுக்கு எதிராக கருத்தை தெரிவித்துவருகிறது.
கிசுகிசு: இதற்கிடையே கடந்த சில காலமாகவே விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. அதனால்தான் முதல் மாநாட்டுக்கு விஜய்யின் மனைவி வரவில்லை என்று கிசுகிசுக்கப்பட்டது. அதேசமயம் கடலூரைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர்; நீங்கள் மனைவியை சில காலம் பிரிந்திருந்தால் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகலாம் என்று விஜய்யிடம் சொன்னதாகவும்; அதன் காரணமாகத்தான் அவர்கள் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் பதிலடி: இந்நிலையில் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது 90களில் ரசிகர்களை சந்தித்தார் விஜய். அப்போது அவரிடம் ரசிகை ஒருவர், உங்களைப் பற்றிய கிசுகிசு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த விஜய், 'என்னைப் பற்றி கிசுகிசு எழுதினார்கள் என்றால் எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஏதாவது ஒரு தவறான செய்தியை எத்தனையோ பேர் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் சென்று இது தவறானது படிக்காதீர்கள் என்று என்னால் விளக்கிக்கொண்டிருக்க முடியாது.
இருந்தாலும் இந்த மாதிரியான விஷயத்தை ரொம்ப கேஷுவலாக எல்லாம் எடுத்துக்கொள்ளமாட்டேன், விடமாட்டேன். யார் அதை எழுதினாரோ அவரிடம் சென்று ஏன் இப்படி எல்லாம் எழுதினீர்கள். யார் உங்களுக்கு இந்த மாதிரி தவறான செய்திகளை கொடுப்பது என்று நிச்சயமாக கேட்பேன்' என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட தளபதி அப்போவே செம தெளிவா இருந்திருக்காரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











