இது எப்போ?.. 40 பேர் கும்பலிடம் அடிவாங்கிய விஜய்.. அவரே சொன்ன த்ரோபேக்.. கடைசி வரை அது நடக்கலையே?

சென்னை: இளைய தளபதி விஜய்யாக இருந்தபோது அவர் கொடுத்த பேட்டி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. தளபதி விஜய் அடுத்ததாக தலைவர் விஜய்யாக மாறி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்தில் அனலை கிளப்பி வருகிறார். அனுதினமும் அவரை பற்றியும் அவரது கட்சியை பற்றியும் மற்ற கட்சிகள் பேசும் அளவுக்கு மாஸ் காட்டி வருகிறார்.

சீமானுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், விஜய்யின் த்ரோபேக் வீடியோக்களையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். வரும் ஏப்ரல் மாதம் சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், க்யூட்டான விஜய்யின் வீடியோக்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

vijay throwback jana nayagan

எக்ஸ் தளத்தில் #TVKVijay ஹாஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் தனது கல்லூரி காலத்தில் ரயிலில் போகும் போது நடந்த சம்பவம் ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயா டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், அந்த வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.

4 பெண்களுடன் பேட்டி: நடிகர் விஜய்யை பேட்டி எடுக்க 4 இளம் பெண்கள் அவரது வீட்டுக்கே சென்று எடுத்த பேட்டி வீடியோ தான் ரசிகர்களை தற்போது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்கு ரொம்ப பிடித்த இசையமைப்பாளர் யார் என்கிற கேள்விக்கு இளையராஜா தான் என பதிலளித்த விஜய் என்ன பாட்டு பிடிக்கும் என்ற கேள்விக்கு அது எக்கச்சக்கமாக இருக்குங்க என பதில் அளித்துள்ளார்.

ரொம்ப பிடித்த பாடல்: நீங்க பாடிய பாடல்களில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாடல் எது என அடுத்த கேள்விக்கு ஜம்ப் பண்ண, "என்னோட லைலா" பத்ரி படத்தில் வரும் பாடல் ரொம்பவே பிடிக்கும். பாடல் வரிகளும் க்யூட்டாக இருக்கும். அந்த பாடலை உருவாக்கிய விதமும் க்யூட்டாக இருக்கும் என்றார். மேலும், பகவதி படத்தில் இடம்பெற்ற "கொக்ககோலா பிரவுன் கலருடா" பாடலும் தனக்கு ரொம்பவே ஃபேவரைட் எனக் கூறினார்.

40 பேரிடம் அடி வாங்கினோம்: குறும்புத்தனமாக நீங்க செய்த ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி சொல்லுங்கள் எனக் கேட்க, ஒரு முறை கல்லூரி நண்பர்கள் எல்லாம் ரயிலில் டூருக்குச் சென்றோம். அப்போ, எங்களுடன் வந்த தோழிகள் சிலரை சில இளைஞர்கள் கிண்டல் பண்ணாங்க. அவங்க 4 பேர்.. நாங்க 10 பேர் விடுவோமா. அடி வெளுத்துவிட்டோம். ஆனால், அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் அவனுங்க எப்படித்தான் மெசேஜ் பாஸ் பண்ணாங்கன்னு தெரியல. ஒரு 40 பேர் உள்ள புகுந்து எங்களை அடி வெளுத்துட்டாங்க. என்னோட சில நண்பர்கள் எல்லாம் புத்தூர் கட்டுப் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தாங்க. அப்போ தான் யோசிச்சேன். அவங்களை அடிக்காம விட்ருந்தா பிரச்சனையே வந்திருக்காதுன்னு செம க்யூட்டாக விஜய் சொன்ன விஷயத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி இருந்த இளைய தளபதியா இப்போ ஃபயரா அரசியல் பேசுகிறார் என அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

vijay throwback jana nayagan

டைரக்ட் பண்ண ஆசை: நடிகர் விஜய்யிடம் அப்பாவை போல படம் இயக்கும் ஆசை இருக்கா? என்கிற கேள்வியை எழுப்ப, நீங்க வேண்டுமானால் பாருங்க, கூடிய சீக்கிரமே கதை, திரைக்கதை, இயக்கம் விஜய்ன்னு வரும் என்றார். ஆனால், இனிமேல் விஜய் படம் இயக்க வாய்ப்பே இல்லை என்றும் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தான் படம் விரைவில் வெளியாகப் போகிறது என்றும் கூறி வருகின்றனர்.

சச்சினுக்கு ரெடி: கடந்த ஆண்டு கில்லி ரீ ரிலீஸ் ஆகி தியேட்டர்கள் எல்லாம் கச்சேரி போல மாறிய நிலையில், சச்சின் ரீ ரிலீஸ் படத்துக்கும் தளபதி ரசிகர்கள் இப்பவே ரெடியாகி வருகின்றனர். ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டையும் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X