யாருங்க சொன்னா எதிரிகள்னு.. அஜித் பட வெற்றியை கொண்டாடிய விஜய்?.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர். இந்தச் சூழலில் அஜித் நடித்த ஒரு படம் மெகா ஹிட்டானதை விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியதாக தீயாக தகவல் ஒன்று பரவிவருகிறது.
இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் பாதியில் படத்திலிருந்து வெளியேறினார்.
அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.
ஆசைப்பட்ட விஜய்: இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டுக்கூட வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய்; என்னிடம் சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரை நானே நடித்திருப்பேன் என சொல்லியிருக்கிறார். இதனை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
கொண்டாடிய விஜய்?: இந்தச் சூழலில் அஜித் நடித்த மங்காத்தா படம் மெகா ஹிட்டானது. ஏகேயின் 50ஆவது படமான அது வெங்கட் பிரபுவின் திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மங்காத்தா படத்தின் வெற்றியை விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியதாகவும்; அப்போது படத்தின் மேக்கிங் குறித்தும், அஜித்தின் நடிப்பு குறித்தும் சிலாகித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
GOAT படத்தில் விஜய்: விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் துபாயில் நடக்கவிருக்கிறது. அதற்காக விஜய் இன்று துபாய்க்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அஜித்துக்கு எப்படி மங்காத்தா என்ற மெஹா ஹிட் படத்தை வெங்கட் பிரபு கொடுத்தாரோ அதேபோல் GOAT படமும் அமையும் என்று தளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











