விஜய்யை செல்லமாக திரிஷா எப்படி கூப்பிடுவார் தெரியுமா?.. கில்லி டைமிலிருந்தே அப்படித்தானாம்
சென்னை: கோலிவுட்டில் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி விஜய் -திரிஷா. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ படங்களில் நடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களில் கில்லி, திருப்பாச்சி தவிர்த்து மற்ற படங்கள் எல்லாம் தோல்வியைத்தான் சந்தித்தன. இருப்பினும் மோஸ்ட் சக்சஸ்ஃபுல் ஜோடி என்ற பெயரையும் அவர்கள் பெற்றார்கள். சூழல் இப்படி இருக்க கடந்த சில மாதங்களாக அவர்களை இணைத்து வைத்து கிசுகிசு கிளம்பியது. அதற்கு தீனி போடும்படிதான் அவர்கள் நடந்துகொண்டார்கள்.
விஜய்யும், திரிஷாவும் மொத்தம் ஐந்து படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். கோட் படத்தில் மட்ட பாடலுக்கு அவர்களுக்கு சேர்ந்து நடனமும் ஆடியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதை திரிஷா தவிர்த்துவிடுவார். ஆனால் விஜய்யுடனான இருக்கும் நெருங்கிய பழக்கம் காரணமாக கோட் படத்தில் ஆடினார். இதற்கிடையே கில்லி, ஆதி சமயங்களில் தொடர்ச்சியாக அவர்கள் சேர்ந்து நடித்தபோது; ஏகப்பட்ட தகவல்கள் இரண்டு பேர் குறித்தும் வந்துகொண்டே இருக்கும்.

நிறுத்திய ஜோடி: தொடர்ந்து பரவிய கிசுகிசுக்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குருவி படத்துக்கு கிட்டத்தட்ட 15 வருடங்கள் வரை அவர்கள் சேர்ந்து நடிக்கவே இல்லை. அப்படிப்பட்ட நிலைமையில்தான் இரண்டு பேரையும் 15 வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில் சேர்த்து வைத்தார் லோகேஷ். படம் படுதோல்வியை சந்தித்தாலும்; இரண்டு பேரின் கெமிஸ்ட்ரில் அனைவரையும் கட்டிப்போட்டது. விஜய்க்கு திரிஷா லிப் லாக்லாம் அடித்திருந்தார். அது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பகிர்ந்த புகைப்படங்கள்: லியோ பட ஷூட்டிங்கின்போது இரண்டு பேரும் மேற்கொண்டு நெருங்கி பழக ஆரம்பித்தார்கள். திரிஷாவோ விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதையும் வழக்கமாக்கியிருந்தார். அப்படி அவர் ஃபோட்டோக்களை ஷேர் செய்யும்போதெல்லாம் இவர்களுக்குள் என்னமோ இருக்கிறது என்பது பெரும்பாலானோரின் குரலாக இருந்தது.இந்த சூழலில்தான் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவை தாக்கல் செய்து; நடிகையுடன் என் கணவர் தொடர்பில் இருக்கிறார். என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஷேர் செய்வார் என்றெல்லாம் கூறினார்.
திரிஷாவுடன் வருகை: திரிஷாதான் விஜய்யுடனான புகைப்படங்களை சமீபத்தில் ஷேர் செய்தது. எனவே அவராகத்தான் இருப்பார் என்று யூகித்தார்கள். உங்கள் யூகங்கள் எல்லாம் தவறில்லை என்பது போல் விஜய்யும், திரிஷாவும் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு ஜோடியாக வந்திறங்கினார்கள். அதை பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ச்சியடைந்தது. முக்கியமாக விஜய்யின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் உச்சக்கட்ட ஷாக் ஆனார்கள். இதற்கு எப்படி அண்ணா முட்டு கொடுப்பது என ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: அவர்கள் எல்லாம் திரிஷா விஜய்யிடமிருந்து விலகிவிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். திரிஷாவின் சோஷியல் மீடியா பக்கத்திலும் அவர்கள் அப்படி கமெண்ட்ஸ் செய்கிறார்கள். இந்நிலையில் திரிஷாவின் த்ரோபேக் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அவர் அந்தப் பேட்டியில், 'கில்லி சமயத்தில் விஜய்யை நாங்கள் சீட்டா என்றுதான் அழைப்போம். ஏனெனில் அவர் சீட்டா ஜாக்கெட்டை போட்டிருப்பார். அதேபோல் எனது ஃபோனில் அவரது பெயரை V என்றுதான் சேவ் செய்திருப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications















