Lokesh Kanagaraj - அவன் எல்லார்கிட்டயும் இப்படித்தானா?.. லோகேஷ் கனகராஜை பங்கமாக கலாய்த்த விஜய்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லோகேஷ் கனகராஜை மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் பங்கமாக கலாய்த்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் களம் என்ற குறும்படத்தை இயக்கினார். அது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக தனது வேலையை உதறிவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இறங்கினார். அப்படி அவர் முதல் படமாக மாநகம் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட் இல்லையென்றாலும் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அவரது மேக்கிங்கில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் எட்டிப்பார்த்தார்.

Vijay Trolled Lokesh Kanagaraj In Master Shooting Spot

கைதி: மாநகரம் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை இயக்கினார். அந்தக் கதையை முதலில் மன்சூர் அலிகானுக்கு அவர் எழுதியதன் மூலமே அவர் தனது கதையின் மேல் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் கைதி கதையை கேட்ட தயாரிப்பு நிறுவனம் பெரிய ஸ்டாரிடம் போகலாம் என கூற அதன் பிறகே கார்த்தி படத்துக்குள் வந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.

விஜய், லோகேஷ்: முதல் இரண்டு படங்களும் ஹிட் கொடுத்த பிறகு மூன்றாவது படம் விஜய்யுடன் இணைந்தார். படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டது. அதுவரை விஜய்யை யாரும் காண்பிக்காத வகையில் காண்பித்து படத்தின் வெற்றியை அறுவடை செய்தார் லோகேஷ். அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது, ஹீரோவின் பெயரை விரிவாக கூறாதது என மேக்கிங்கில் வித்தியாசத்தை காண்பித்திருந்தார் அவர்.

விக்ரம்: மூன்று படங்கள் வெற்றியை அடுத்து கமல் ஹாசனுடன் விக்ரம் படத்தில் இணைந்தார். கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பதை அவரே பல மேடைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தான் கமல் ஹாசனின் எவ்வளவு வெறித்தனமான ரசிகன் என்பதை விக்ரம் மேக்கிங்கில் காண்பித்தார் அவர். குறிப்பாக லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸை உருவாக்கி அதகளம் செய்தார்.

லோகேஷுக்கு பாராட்டு: லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் நடந்த லியோ ஷூட்டிங்கின்போது யூனிட்டில் வேலை செய்த கடைநிலை ஊழியர்களை அடையாளப்படுத்தும் விதமாக மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தார். அது அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. அதேபோல் லோகேஷ் இந்த அளவு உயர்ந்திருப்பதற்கு காரணம் அவரது திறமை மட்டுமின்றி குணமும், திட்டமிடலும் ஒரு காரணம் என அவருடன் பழகியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பங்கமாய் கலாய்த்த விஜய்: லோகேஷ் கனகராஜிடம் எப்போதும் சீன் பேப்பர் இருக்காது.அதை மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட விஜய் ஓபனாகவே கூறியிருந்தார். இந்தச் சூழலில் லோகேஷ் கனகராஜை விஜய் பங்கமாய் கலாய்த்தது தெரியவந்திருக்கிறது. அதாவது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகை கௌரியிடம் சென்ற விஜய், 'இன்னைக்கு என்ன சீன் அதற்கு ப்ரீப்பேர் ஆகிட்டியா என கேட்டிருக்கிறார்.

அவன் எல்லார்ட்டையும் இப்படித்தானா?: அதற்கு கௌரியோ (96 இளவயது ஜானு), 'சார் எப்படியாக இருந்தாலும் அவர் (லோகேஷ் கனகராஜ்) வந்த பிறகு சீனை மாத்திடுவார்' என சொல்லியிருக்கிறார். அதற்கு உடனே விஜய், 'ஓ அவர் எல்லார்ட்டையும் இதத்தான் சொல்லிட்டு இருக்கானா' என கேட்டுவிட்டு லோகேஷ் கனகராஜிடம் சென்ற அவர், "டேய் நீ எல்லார்ட்டையும் இப்படித்தான் சொல்லிட்டு இருக்கியா. சிறப்புடா. நான் மட்டும்தான்னு நினைச்சேன். எல்லாரும் அதையேத்தான் சொல்றாங்க" என்றிருக்கிறார். இந்தத் தகவலை லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X