ரஜினியின் ரீல் மாப்பிள்ளையாக பார்த்த விஜய்.. நேரடியாகவே கேட்டு இருக்காரே.. யோசித்து நல்ல முடிவெடுத்த ரஜினி
சென்னை: மொத்த ரஜினி ரசிகர்களும் சூப்பர் ஸ்டாரின் 75 வது பிறந்த நாளைக் கொண்டாட தயாராகி வருகிறார்கள். வரும் 12ஆம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்துவிட்டது. இன்றைக்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பிசினஸில் நடிகர் விஜய் போட்டிக்கு நிற்கிறார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்தாலும், ரஜினியை பார்த்து வளர்ந்த நடிகர் விஜய். தனது பல படங்களில் தன்னை எம்.ஜி.ஆர் ரசிகர் என்றும் ரஜினி ரசிகர் என்றும் காட்டிக் கொண்டுள்ளார்.
சிவகாசி படத்தில் ரஜினி ரசிகராகவே காட்டிக் கொண்டார், அதேபோல் 'அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன்டா' போன்ற பாடல் எல்லாம் விஜய் ரஜினியின் ரசிகராக தன்னை திரையில் காட்டிக் கொண்டுள்ளார் என்பதை உணர்த்துகிறது. இணையதளத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் பதிவிட்டு வந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் போது எல்லாம், சூப்பர் ஸ்டார் ரஜினி என்றே குறிப்பிடுகிறார்.

விஜய்: இப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாப்பிள்ளையாக முயற்சித்துள்ளார். அதாவது ரீல் மாப்பிள்ளையாக முயற்சித்துள்ளார். இதை அவரே நேரடியாக கேட்டுள்ளார். இது தொடர்பாக ரசிகை ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு, படையப்பா படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு விஜய், " படையப்பா படத்தில் என்னை நடிக்கச் சொல்லி யாரும் கேட்கவில்லை. நானாகத்தான் கேட்டேன். சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால்தான் கேட்டேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை. வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன் என்று தெரிவித்தார்.
நிராகரித்த ரஜினி: ஆனால் படையப்பா படத்தில் விஜய் நடிக்கவில்லை. ஒரு வேளை விஜய் நடித்திருந்தால் நாசரின் மகனாகவும் ரஜினியின் மாப்பிள்ளையாகவும் தான் நடித்திருக்க வேண்டும். அதாவது அப்பாஸ் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க முயற்சித்திருக்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டார் அதை நிராகரித்துவிட்டார்.

யோசித்து நல்ல முடிவு: அதற்கு காரணம் அப்பாஸ் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகவும் சிறிய கதாபாத்திரம். படத்தின் கதையிலேயே, வெகு சில நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய கதாபாத்திரம். அப்படி இருக்கும்போது, இந்த கதாபாத்திரத்தை கதாநாயகனாக வளர்ந்து நிற்கும் விஜய்க்கு செட் ஆகாது, வேறு படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினி முடிவு எடுத்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னரும் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. தற்போது விஜய்யின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











