Priyanka: முதல் கணவரைக் கழட்டி விட என்ன காரணம்? இப்படி எல்லாம் நடந்ததா? யார்தான் பொருத்துக்குவாங்க?

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, சீரியல் தயாரிப்பாளரான வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் குறித்து தகவல்கள் முன்கூட்டியே எதுவும் வராததால் இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. இப்படியான நிலையில் இவரது முதல் கணவர் குறித்த கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது. இந்நிலையில் இவரது முதல் திருமண வாழ்க்கை குறித்து பிரியங்கா முன்னர் ஒரு முறை பேசியுள்ளார்.

பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார். விஜய் டிவியில் தற்போது மிகவும் முக்கியமான தொகுப்பாளினியாக இவர் உள்ளார். இவரும் மா.க.பாவும் இணைந்து ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால், ரசிகர்களுக்கு நேரம் போவதே தெரியாது எனக் கூறலாம். அதேபோல் பல நிகழ்ச்சிகளை அவர் தனியாக தொகுத்து வழங்கியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், இவர் பல படங்களின் புரோமோசன் நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் என பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். தன்னை எவ்வளவு கலாய்த்தாலும் பிரச்னையில்லை மக்கள் சிரித்தால் போதும் என்ற மனநிலையில் அவர் இருப்பதாலே இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

Vijay TV Anchor Priyanka Deshpande and Her Mothar Talks About Priyanka First Husband Throwback

முதல் கணவர்: இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்திற்கு மாகபா ஆனந்த் சென்றிருந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் சென்றுள்ளது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டே பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அதற்கு முன்னர் இருந்தே தனியாக இருந்து வந்துள்ளார்கள். அதனால்தான், பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஃபேமிலி வாரத்தில் நடத்தப்படும் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிரவீன் குமார் கலந்து கொள்ளவில்லை. பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் மட்டுமே கலந்து கொண்டனர்.

Vijay TV Anchor Priyanka Deshpande and Her Mothar Talks About Priyanka First Husband Throwback

பிரிவு: இப்படியான நிலையில் ஒரு முறை தனது முதல் கணவர் குறித்து பேசும்போது, " இந்த ஆண்களுக்கு என்ன டேஸ்ட் என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் தன்னுடைய நண்பர்களுடன் வெளியில் போவதை சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எப்போதாவது பொண்டாட்டியை கூட்டிட்டு போகணும்னு நினைக்க மாட்டாங்கனு நினைக்கிறேன். பொண்டாட்டிங்க ஊருக்கு போயிட்டா கூட என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு அவங்க வாட்ஸ்-ஆப் குரூப்ல மெசேஜ் போட்டு சந்தோஷப்படுறாங்க. ஆனா அந்த வாட்ஸ்-ஆப் குரூப்ல நான் இருப்பதை கூட மறந்து பேசீட்டு இருக்காங்க" என பேசியிருந்தார். இது போன்ற காரணங்களும் பிரியங்கா தனது முதல் கணவரை பிரிய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்குமா என்ற கேள்வியை தற்போது பலரும் எழுப்பி வருகிறார்கள்.

Vijay TV Anchor Priyanka Deshpande and Her Mothar Talks About Priyanka First Husband Throwback

கண்ணீர்: அதேபோல், 15 ஆண்டுகள் தொகுப்பாளினியாக உள்ள பிரியங்காவிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அவரது தாயார் மேடை ஏற்றப்பட்டார். பிரியங்காவின் தாயார் பேசும்போது, " பிரியங்கா தனது வாழ்க்கையில் ஏற்கனவே செய்த தவறை போல மறுபடியும் செய்யக்கூடாது. சரியான ஒன்றைத் தேர்வு செய்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏற்கனவே செய்த தவறால் நான் ரொம்பவும் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறேன். இனிமேல் இப்படி நடக்க கூடாதுனு நம்புகிறேன் எனக் கூறினார். அதற்கு பிரியங்கா தேஷ்பாண்டே அழுது கொண்டே தலையசைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக அது ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி உள்ளது. மக்கள் மத்தியில் எப்போதும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை மாற்றியுள்ளார் பிரியங்கா. சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி வெள்ளித்திரை பிரபலங்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி மட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இப்படியான நிலையில் இன்று மாலை முதல் பிரியங்கா குறித்த புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது திருமணம் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தான். பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர் சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனது திருமண புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்பா புகைப்படம்: பரவி வரும் இவர்களின் திருமண வீடியோவில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் அப்பா புகைப்படம் மணமேடையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பிரியங்காவின் அப்பாவான தேஷ்பாண்டே பிரியங்கா சிறு வயதில் இருக்கும் போது மறைந்து விட்டார் என கூறப்படுகிறது. இதனால் இவரது திருமணத்தில் பிரியங்காவின் அப்பாவான தேஷ்பாண்டேவின் புகைப்படம் மணமேடையில் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள், தனது அப்பாவின் ஆசீர்வாதம் தனக்குத் தேவை என்பதால்தான் தனது அப்பாவின் புகைப்படத்தை மணமேடையில் வைத்துள்ளார் பிரியங்கா எனத் தெரிவித்துள்ளார்.

எமோஷனல்: பிரியங்கா கழுத்தில் வசி தாலி கட்டிய பின்னர் மிகவும் எமோஷனலான பிரியங்கா தேஷ்பாண்டே ஆனந்த கண்ணீர் சிந்தினார். குறிப்பாக தனது கணவர் வசியை மிகவும் எமோஷனலாக பார்த்து அழுதார். பிரியங்கா தேஷ்பாண்டே அழுவதை பார்த்ததும், அவரை தேற்றுவதற்கு பிரியங்காவின் நெற்றியில் முத்தம் வைத்தார். இருவரும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் லைக்குகளையும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதேபோல் இன்பமாகவும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் இருக்க வேண்டும் எனவும் கூறிவருகிறார்கள்.

பிரியங்காவின் முதல் திருமண வாழ்க்கை எதிர்பார்த்ததைப் போல் சிறப்பாக அமையவில்லை. இதனால் பிரியங்காவின் அம்மாவும் சகோதரரும் மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்தார்கள். இது தொடர்பாக பிரியங்காவின் அம்மா நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் வருத்தமாக பேசியிருந்தார். இப்படியான நிலையில் பிரியங்கா சீரியல் தயாரிப்பாளர் வசியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது அவர்களது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரது தயார் மிகவும் மன மகிழ்ச்சியில் உள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்களில் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X