Priyanka: கால் பிடித்துவிடும் மாமனார்.. முதல் கணவரையும் மாமனாரையும் பாராட்டிய பிரியங்கா.. இப்போ?
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா சில தினங்களுக்கு முன்னர் டி.ஜே வசி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் இணையத்தில் வேகமாக பரவியது. பிரியங்காவுக்கு இது இரண்டாவது திருமணம். எனவே பலரும் அவரது முதல் திருமணம் குறித்து பல சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்தனர். இப்படியான நிலையில் தனது முதல் கணவர் பிரவீன் குமாரின் அப்பா குறித்து மேடையில் புகழ்ந்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரியங்கா தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையாக தொகுக்கும் அவரது பாணியில் தொடங்கி, நகைச்சுவையாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்ல தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என பிரிங்காவின் ஈடுபாடு பாராட்டுதலுக்குரியது. பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்த செய்தியைத் தெரிந்து கொண்டதும், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பலர் தங்கள் வீட்டு விசேஷம் போலவும் மகிழ்ந்தனர்.

இவர் முதல் கணவரைப் பிரிந்ததற்கு பலரும் பல காரணங்களைக் கூறி வரும் நிலையில், தனது முதல் கணவரின் அப்பா குறித்து அதாவது தனது மாமனார் குறித்து பிரியங்கா விருது நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பலர் இந்த வீடியோவை தற்போது இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
மாமனார்: பிரியங்கா அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, " நான் இந்த விருதினை வாங்க முக்கியமான காரணங்களில் ஒருவர் எனது கணவர் பிரவீன் குமார் தான். கணவரின் ஆதரவு இல்லாமல் ஒரு பெண் ஊடகத் துறையில் அடுத்தடுத்து லெவலுக்கு போக முடியுமா எனத் தெரியவில்லை. அந்த சப்போர்ட், எனது பெரிய பலம் என் கணவன் பிரவீன் குமார் தான். நான் ஷூட்டிங் முடித்து வீட்டுக்குப் போகும்போது எனது கால்கள் இரண்டும் வலிக்கும். எனது மாமனார், காலுக்கு தைலம் போட்டுவிட்டு, கால் பிடித்துவிடுவார். எனது கணவரின் அப்பா, அம்மா, கணவனின் சகோதரிகள் என அனைவருக்கும் நன்றி" எனக் கூறுகிறார்.
கேள்வி: பிரியங்கா தனது முதல் கணவர் குறித்து, அவரது குடும்பத்தினர் குறித்து மிகவும் எமோஷனலாக பேசும் வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. சிலர் அப்படியான கணவனை, அவரது குடும்பத்தை ஏன் பிரிந்தீர்கள் பிரியங்கா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். பிரியங்கா தனது முதல் கணவரை கடந்த 2022ஆம் ஆண்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.

லவ்லி வீடியோ: பிரியங்காவின் திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் திருமணம் தொடர்பாக, திருமணத்திற்கு முன்னர் ஊடகங்களில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் திருமணம் முடிந்த பின்னர் திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வேகமாக பரவியது. குறிப்பாக பிரியங்காவின் கழுத்தில் வசி தாலி கட்டும்போது, வசியைப் பார்த்து பிரியங்கா எமோஷனலாக அழுவதும், அவரைத் தேற்றுவதற்கு வசி, பிரியங்காவுக்கு முத்தம் கொடுப்பதும் என லவ்லியான வீடியோ தான் வேகமாக பரவியது.
பிரியங்கா தனது வாழ்க்கையில் ஏற்கனவே செய்த தவறை போல மறுபடியும் செய்யக்கூடாது. சரியான ஒன்றைத் தேர்வு செய்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏற்கனவே செய்த தவறால் நான் ரொம்பவும் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறேன். இனிமேல் இப்படி நடக்க கூடாதுனு நம்புகிறேன் எனக் கூறினார். அதற்கு பிரியங்கா தேஷ்பாண்டே அழுது கொண்டே தலையசைத்தார்
ப்ரியங்காவின் திருமண வீடியோவில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் அப்பா புகைப்படம் மணமேடையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பிரியங்காவின் அப்பாவான தேஷ்பாண்டே பிரியங்கா சிறு வயதில் இருக்கும் போது மறைந்து விட்டார் என கூறப்படுகிறது. இதனால் இவரது திருமணத்தில் பிரியங்காவின் அப்பாவான தேஷ்பாண்டேவின் புகைப்படம் மணமேடையில் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள், தனது அப்பாவின் ஆசீர்வாதம் தனக்குத் தேவை என்பதால்தான் தனது அப்பாவின் புகைப்படத்தை மணமேடையில் வைத்துள்ளார் பிரியங்கா என்று கூறினார்கள்.
பிரியங்கா கழுத்தில் வசி தாலி கட்டிய பின்னர் மிகவும் எமோஷனலான பிரியங்கா தேஷ்பாண்டே ஆனந்த கண்ணீர் சிந்தினார். குறிப்பாக தனது கணவர் வசியை மிகவும் எமோஷனலாக பார்த்து அழுதார். பிரியங்கா தேஷ்பாண்டே அழுவதை பார்த்ததும், அவரை தேற்றுவதற்கு பிரியங்காவின் நெற்றியில் முத்தம் வைத்தார். இருவரும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் லைக்குகளையும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மேலும் இதேபோல் இன்பமாகவும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் இருக்க வேண்டும் எனவும் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டார்கள்.
வி.ஜே. ஆர்ச்சனா ஒருமுறை பிரியங்காவை வாழ்த்தும்போது, “" உருகி உருகி காதலிக்கும் ஒருத்தன் வரனும், வருவான். குதிரையில் உன்னை வலம் வரச் செய்வானானு எனக்குத் தெரியவில்லை. உனது பாதத்தில் இருப்பவனாக அவன் இருப்பான். அப்படியான ஒருவனுக்காக காத்திருப்பவள் நீ. அவன் உன்னை காதலிக்க வேண்டும். அவன் உனக்கு ஒரு குழந்தை கொடுக்க வேண்டும். இந்த உலகுக்கு முன்னால், லயன் கிங் படத்தில் சிம்பாவைத் தூக்கிக் காட்டுவது போல, இது பிரியங்காவின் மக்ன், இது பிரியங்காவின் மகள் என்று காட்ட வேண்டும். அதற்காக நான் வாழ்த்துகிறேன், பிராத்திக்கறேன். அந்த மலைக்கு மேல் குழந்தையைக் காட்டும் போது கீழே அதிகப்படியான மிருகங்கள் இருக்கும். அதில் வயதான குரங்கு ஒன்று இருக்கும், அந்த வயதான குரங்காக நான் அங்கே நின்று உனது மகிழ்ச்சியைக் கொண்டாடுவேன். அப்போது நான் பேரன்போடு, அது என் குழந்தை எனக் கூறுவேன். உனது மகிழ்ச்சிக்காக நான் வாழ்த்துகிறேன். அளவில்லாத மகிழ்ச்சி உனக்கு கிடைக்கட்டும்.
குறையே இல்லாத ஒரு அன்பான வாழ்க்கை, 16 செல்வங்களும் பெற்று, என்றைக்குமே கண்ணீர் என்பது உன் கண்களில் இருந்து வருகிறது என்றால் அது சந்தோஷத்திலும் பூரிப்பிலும் மட்டுமே உனக்கு வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். நாங்கள் எல்லோரும் வேண்டிக் கொள்கிறோம். வி லவ் யூ." என வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. அவர்களின் திருமணத்திற்கு வி.ஜே. மாகபா ஆனந்த் சென்றிருந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டே பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அதற்கு முன்னர் இருந்தே தனியாக இருந்து வந்துள்ளார்கள். அதனால்தான், பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஃபேமிலி வாரத்தில் நடத்தப்படும் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிரவீன் குமார் கலந்து கொள்ளவில்லை. பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











