அட அந்த அஜித் படத்தில் விஜய் நடித்திருக்க வேண்டியதா?.. ச்ச சூப்பர் ஹிட் ஒன்னு மிஸ் ஆகிடுச்சே

சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர்.அஜித் இப்போது விடாமுயற்சி படத்திலும், விஜய் GOAT படத்திலும் நடித்து வருகிறார். இந்தச் சூழலில் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான ஒரு படத்தில் விஜய் நடிக்க வேண்டியதிருந்தது தெரியவந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

Vijay Was the First Choice to Act in Attagasam Movie Here is the details

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை.

நேருக்கு நேர்: ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் நேருக்கு நேர். வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் கமிட்டானது அஜித்தான். சில நாள்கள் ஷூட்டிங்கும் சென்ற ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் சம்பள விவகாரத்தில் அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் முட்டிக்கொண்டதாகவும் அதனால்தான் அஜித் நேருக்கு நேர் படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறப்படுகிறது.

அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல் இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.

ஆசைப்பட்ட விஜய்: இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டுக்கூட வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய்; என்னிடம் சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரை நானே நடித்திருப்பேன் என சொல்லியிருக்கிறார். இதனை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். விஜய் இப்போது GOAT படத்திலும், அஜித் விடாமுயற்சி படத்திலும் நடித்துவருகிறார்கள்.

மிஸ் செய்த விஜய்: இந்நிலையில் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ஒன்றில் விஜய் நடிக்கவிருந்தது தெரியவந்திருக்கிறது. அதாவது சரண் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் அட்டகாசம். அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முக்கியமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அஜித்திற்கென்று தனி மாஸை உருவாக்கியது. அந்தப் படத்தின் கதையை விஜய்யிடம்தான் சரண் முதலில் சொன்னதாகவும் ஆனால் சில காரணங்களால் விஜய் நடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் இன்னொரு கதையையும் சரண் விஜய்யிடம் சொன்னாராம். ஆனால் அதிலும் விஜய்யால் நடிக்க முடியவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X