என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்ததாக அவர் அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் விக்ரம் நடித்த படத்தில் இன்னொரு நடிகர் நடிக்க வேண்டியிருந்தது தெரியவந்திருக்கிறது.

சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

Vijay was the First Choice to Act in Dhool Movie Here are the details

இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

ஆதித்த கரிகாலன்: விக்ரம் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிரட்டியிருந்தார் விக்ரம். அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் தங்கலான் படம் அவரது திரையுலக வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

விரைவில் ரிலீஸ்: முதலில் அந்தப் படம் ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தற்போது ஏப்ரலுக்கு பிறகு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருக்கும் விக்ரமுக்கு தங்கலான் படத்தின் மூலம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

தூள்: இதற்கிடையே விக்ரமின் கரியரில் அமைந்த மெகா ஹிட் படங்களில் ஒன்றுதான் தூள். விக்ரமின் நெருங்கிய நண்பரான தரணி அந்தப் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்துக்கு முன்னதாகவே விக்ரமும், தரணியும் இணைந்த தில் படமும் மெகா ஹிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தூள் படத்தில் முதலில் விஜய்தான் நடிக்க வேண்டியதிருந்ததாம்.

முதலில் தரணி விஜய்யிடம்தான் தூள் கதையை சொன்னாராம். ஆனால் விஜய்க்கு ஏனோ அந்தக் கதை மீது நம்பிக்கை பிறக்கவில்லையாம். அதனையடுத்துதான் தரணி விக்ரமிடம் சென்றாராம். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்துதான் கில்லி வாய்ப்பை விஜய் கொடுத்ததாக தெரிகிறது. கில்லியும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்புகூட ரீ ரிலீஸ் ஆகியும் கில்லி சக்கைப்போடு போடுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X