Vijay: "அந்த ரெண்டு படம் தான் காரணம்.." அப்பாவிடம் பேச மறுத்த விஜய்... இப்போ எல்லாமே ஓவர்!

சென்னை: தளபதி 68 படத்திற்காக அமெரிக்கா சென்றிருந்த விஜய், இரு தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்.

அதேநாளில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஓய்வில் இருந்த தனது அப்பா எஸ்.ஏ சந்திரசேகரை நேரில் சென்று பார்த்தார்.

நீண்ட நாட்களாக தனது அப்பாவிடம் பேசாமல் இருந்த விஜய், தற்போது இயல்புநிலைக்கு திரும்பியது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில், அப்பாவிடம் விஜய் பேசாமல் இருந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

 Vijay: Why Vijay did not talk to his father has been revealed

அப்பாவுடன் பேச மறுத்த விஜய்: நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், இன்று கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வெரைட்டி காட்டி வருகிறார். விஜய்யின் ஆரம்ப காலங்களில் அவருக்கு சப்போர்ட்டாக இருந்தது அவரது பெற்றோர் தான். அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரும் அம்மா ஷோபாவும் விஜய்க்காக தொடர்ந்து படங்களை இயக்கி, தயாரித்து வந்தனர். விஜய்க்கு என ஒரு அடையாளம் கிடைக்கும் வரை அவரது அப்பா தான் பக்கபலமாக இருந்தார்.

விஜய்யின் படங்களை தேர்வு செய்வதும், கதைகள் கேட்பதும் அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திடீரென விஜய்யும் அவரது அப்பாவும் பேசாமல் இருந்து வந்தனர். இருவருக்கும் இடையே பிரச்சினை எனவும், அதனால் அவர்கள் சந்தித்துக்கொள்வது கூட இல்லையென்றும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூட விஜய் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் தான் உடல் நலகுறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஓய்வில் இருந்தார் எஸ்.ஏ.சி. இதனையடுத்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய், உடனடியாக தனது அப்பாவை நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது விஜய் அவரது அப்பா, அம்மா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது. தங்களுக்குள் எந்தவிதமான சண்டையும் இல்லையென்பதை நிரூபிக்கும் விதமாக, தனது அப்பாவை நேரில் சந்தித்தார் விஜய்.

இந்நிலையில், விஜய் தனது அப்பாவிடம் பேசாமல் இருந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் விஜய். இந்தப் படத்தில் நடிக்க விஜய்க்கு விருப்பம் இல்லையென்றாலும், அப்பா கேட்டுக் கொண்டதால் நடித்தாராம். அதேபோல், மதுர படத்தின் கதையையும் எஸ் ஏ சந்திரசேகர் மட்டுமே கேட்டுவிட்டு ஓக்கே செய்துவிட்டாராம். அந்தப் படமும் தோல்வியைத் தழுவியது.

இதுபோல மேலும் சில படங்களின் கதைகளிலும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தலையிட்டதும், அவரே சில திருத்தங்கள் செய்ததும் விஜய்க்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. அதேபோல், விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் எஸ்.ஏ சந்திரசேகர் தன்னிச்சையாக முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே விஜய் இதுநாள் வரை பேசாமல் இருந்ததாகவும், இப்போது அனைத்து முடிவுகளையும் விஜய் மட்டுமே எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் இப்போது அப்பாவை எந்த தயக்கமும் இல்லாமல் விஜய் சந்தித்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X