இப்போ மட்டும் இல்லை பாஸ்.. அப்போவே அப்படி.. விஜய் பற்றி செம விஷயம் உள்ளே
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத அக்கட்சி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. கட்சியின் மாநாடும் இந்த மாதம் நடக்கவிருப்பதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில வருடங்களாகவே ஆரூடம் கூறப்பட்டது. அவரும் அதனை உறுதி செய்யும் விதமாக தனது மக்கள் இயக்கம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்துவந்தார். நிலைமை இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியின் பாடலும், கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பதன் காரணமாக அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இருந்தாலும் சோகம்: தங்கள் தளபதி அரசியலுக்கு வந்துவிட்டாலும் ரசிகர்களிடையே ஒரு சோகம் இருக்கிறது. அதாவது அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருப்பதாக கூறுகிறார். சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுக்க முழுக்க அரசியலில்தான் கவனம் செலுத்தவிருக்கிறார். சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் போல் தமிழ்நாட்டு அரசியலிலும் தனது தடத்தை ஆழமாக பதித்துவிட வேண்டுமென்ற முழுமுனைப்பில் இருக்கிறார் விஜய். அதற்கான பணிகளையும் ஆரம்பித்திருக்கிறார்.
விரைவில் மாநாடு: கட்சியின் மாநாடு இந்த மாதம் நடக்கவிருக்கிறது. அதற்காக தவெக தொண்டர்கள் இப்போதே தயாராகியிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய புஸ்ஸி ஆனந்த், 'ஆஃபிஸில் லீவ் கிடைக்கவில்லையென்றாலும் வேலையை விட்டுவிட்டு மாநாட்டுக்கு வாருங்கள்' என அழைக்கும் தொனியில் பேசியிருந்தார். அந்தப் பேச்சை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் கொஞ்சம் விஜய் அப்செட் என்று சொல்லப்படுகிறது.
உதவிகள்: விஜய் பொதுவாகவே நலத்திட்ட உதவிகளை பல காலமாக செய்துவருகிறார். இருந்தாலும் அவரது ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாறியதற்கு அடுத்து அவர் செய்யும் உதவிகளில் பெரும் வேகம் இருந்தது.அதனையடுத்து அரசியல் கட்சி தொடங்கிவிட்டார். கட்சி தொடங்கிய கையோடு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தார். மேலும் மாணவர்கள், மாணவிகளுக்கும் பரிசு தொகை வழங்கி மகிழ்வித்தார்.

ட்ரெண்டாகும் விஷயம்: இதனைப் பார்த்த ஒருதரப்பினர் விஜய் அரசியலுக்கு வந்ததால்தான் இத்தனை நாட்களாக உதவி செய்தார் என்று கமெண்ட்ஸ் செய்தனர். இந்நிலையில் விஜய் பற்றி புதிய தகவல் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது விஜய் தான் நடிக்க ஆரம்பித்து வளர்ந்துகொண்டிருந்தபோதே ஏகப்பட்ட உதவிகளை சத்தமில்லாமல் செய்திருக்கிறார். அந்தவகையில் 90களில் ஸ்டாலினிடம் மக்களுக்கான உதவி பொருளை வழங்கும் புகைப்படம் ஒன்றை ரசிகர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அது ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











