Vijayakanth: விஜயகாந்த் அடிச்சிருவார்ன்னு பயந்தேன்... படப்பிடிப்பில் மிரண்டு போன பிரபல நடிகை!

சென்னை: தமிழ்த் திரையுலகின் கேப்டன், புரட்சிக் கலைஞர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜயகாந்த்.

சினிமாவில் நடிக்கத் தொடங்கியது முதல் தன்னுடன் நடித்தவர்களுக்கு உதவி செய்தே வாழ்ந்து பழகியவர்.

விஜயகாந்தின் உதவும் குணம் உட்பட அவரது தனிப்பட்ட பண்புகளை திரையுலகைச் சேர்ந்த பலரும் பகிர்ந்துள்ளனர்.

ஆனால், விஜயகாந்த் குறித்து சரியாக புரிந்துகொள்ளாமல் அவரை தவறாக நினைத்துள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

 Vijayakanth: Actress Soundarya was afraid to act with Vijayakanth

விஜயகாந்தை பார்த்து மிரண்ட நடிகை

தமிழ்த் திரையுலகில் மிகவும் வித்தியாசமானவர் கேப்டன் விஜயகாந்த். நடிப்பு, அரசியல் என ரொம்பவே பரபரப்பாக இருந்த விஜயகாந்த், தற்போது உடல்நலக் குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். ஆனால், இவர் சினிமாவில் நடிக்கும் போது தன்னுடன் நடித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்கவே மாட்டாராம்.

எம்ஜிஆருக்குப் பிறகு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பிடித்த நடிகராக விஜயகாந்த் காணப்படுகிறார். உணவு, பண உதவி என யாருக்கு என்ன தேவை என்றாலும் ஓடோடிச் சென்று உதவியுள்ளார். அதனால், இப்போதும் விஜயகாந்த் உடன் நடித்த அனுபவத்தை நடிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இப்படிப்பட்ட விஜயகாந்தை பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டில் பயந்து நடுங்கியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

 Vijayakanth: Actress Soundarya was afraid to act with Vijayakanth

அவர் வேறு யாரும் இல்லையாம், 2004ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நடிகை செளந்தர்யா தானாம். தமிழில் பொன்னுமணி படம் மூலம் நாயகியாக அறிமுகமான செளந்தர்யா, அதனைத் தொடர்ந்து சத்யராஜுடன் சேனாதிபதி, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, கமலுடன் காதலா காதலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் விஜயகாந்துடன் தவசி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் செளந்தர்யா. உதயசங்கர் இயக்கிய தவசி திரைப்படம் 2001ம் ஆண்டு வெளியானது. விஜயகாந்த், செளந்தர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தவசி படத்தில் நடிப்பதற்காக முதலில் செளந்தர்யாவிடம் பேசியுள்ளார் இயக்குநர் உதயசங்கர். ஆனால், விஜயகாந்துடன் நடிக்க முதலில் மறுப்புத் தெரிவித்துள்ளார் செளந்தர்யா.

 Vijayakanth: Actress Soundarya was afraid to act with Vijayakanth

அவரிடம், விஜயகாந்த் ரொம்ப கோபமானவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென யாரையும் அடித்துவிடுவார் என தவறாக கூறியுள்ளனர். இதனால் விஜயகாந்துடன் நடிக்க பயந்துள்ளார் செளந்தர்யா. இதனையறிந்த விஜயகாந்த் சௌந்தர்யாவை மூன்று நாட்கள் படப்பிடிப்பில் சும்மா வந்து பார்த்துவிட்டு போகட்டும் என்றுள்ளார். அந்த மூன்று நாட்களில் சௌந்தர்யா இல்லாத காட்சியை மட்டும் எடுத்துள்ளார்களாம். அப்போது விஜயகாந்த் பற்றி புரிந்துகொண்ட செளந்தர்யா, அதன்பின்னர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ஜோடியாக நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X