Ajith: எகிறிப் பார்த்த விஜயகாந்த்... கூலாக டீல் செய்த அஜித்... கடைசிவரை அதுமட்டும் நடக்கவே இல்ல!

சென்னை: துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இடையே நடந்த ஒரு சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகர் சங்க விழாவுக்கு விஜயகாந்த் அழைத்தும் அஜித் முடியாது என மறுத்ததாக சொல்லப்படுகிறது.

 Vijayakanth and Ajith Throwback Story about the Nadigar Sangam Events

விஜயகாந்தை டீல் செய்த அஜித் : அஜித்தின் துணிவு திரைப்படம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பால், அஜித்தின் 62வது படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி, லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ளது. விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அஜித் - விஜயகாந்த் இடையேயான ஒரு சம்பவம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. பொதுவாகவே அஜித் சினிமா உட்பட எந்த பொதுநிகழ்ச்சிகளுக்கும் செல்வதில் ஆர்வம் காட்டமாட்டார். தான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கே செல்வதில்லை. இதுகுறித்து முதலிலேயே தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு கால்ஷீட் கொடுப்பது தான் அஜித்தின் வழக்கம்.

அதுமட்டும் இல்லாமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கூட, "தன்னை கட்டாயப்படுத்தி விழாவுக்கு வர சொல்வதாக" மேடையிலேயே கூறி அதிரவைத்தார் அஜித். அப்படிப்பட்டவரை கேப்டன் விஜயகாந்தும் ஒருமுறை நடிகர் சங்க விழாவுக்காக கட்டாயப்படுத்தி வர சொன்னாராம். தமிழ்த் திரையுலகில் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த 1999 முதல் 2004 வரையிலான காலக்கட்டம் மிக முக்கியமானது.

அப்போது தான் நடிகர் சங்க கடனை அடைக்க பல கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் விஜயகாந்த். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் முதல் பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டனர். இதற்காக நடிகர் அஜித்தையும் அழைத்துள்ளார் விஜயகாந்த். ஆனால், தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்த அஜித், நடிகர் சங்க விழாவில் கலந்துகொள்ள முடியாது எனக் கூறிவிட்டாராம்.

ஆனால் விடாமல் அஜித்தை கட்டாயப்படுத்திய விஜயகாந்த், "நீ வந்தே ஆகவேண்டும், இல்லையென்றால் பிரச்சினை செய்வோம். உன் படம் எடுக்க விடமாட்டோம், ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்" என விஜயகாந்த் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அதற்கு கொஞ்சம் அஞ்சாத அஜித், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை எனக் கூறியதோடு "நான் விழாவுக்கு வரமாட்டேன் எனது சார்பாக நிதியை வழங்குகிறேன். நிதிக்காக தான் நீங்கள் விழா நடத்துகிறீர்கள் அப்புறம் என்ன..?" என்று விஜயகாந்த்தை ஆஃப் செய்துவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X