Vijayakanth: ஹீரோவாகும் முன் விஜயகாந்தின் முதல் போட்டோ ஷூட்... வாவ்! அப்பவே ஆக்‌ஷன்ல மிரட்டுறாரே

சென்னை: தமிழ்த் திரையுலகில் கேப்டன் என்றால் அது விஜயகாந்த் தான் என்பது அனைவரும் அறிந்ததே.

புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என திரையுலகினரால் கொண்டாடப்படும் நடிகர் விஜயகாந்த்.

எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு ஹீரோவானவர் கேப்டன்.

அவர் ஹீரோவாகும் முன்னர் எடுத்த போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

 Vijayakanth: Captain Vijayakanths first photo shoot photos are trending

விஜயகாந்தின் முதல் போட்டோ ஷூட்: கேப்டன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த், தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களுக்கான போக்கையே மாற்றி அமைத்தவர் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் என தமிழ்த் திரையுலகில் இரண்டு ஜாம்பவான்கள் கலக்கிக் கொண்டிருக்கும் போதே, விஜயகாந்தும் மாஸ் ஹீரோவாக கெத்து காட்டினார்.

மதுரையில் இருந்து எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் சென்னை வந்தவர், பின்னாளில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். விஜயகாந்தின் சண்டைக் காட்சிகளுக்காகவே ஓடிய படங்கள் அதிகம். அதேபோல், மற்றவர்களுக்காக உதவுவதிலும் கேப்டன் விஜயகாந்துக்கு நிகரானவர்கள் யாரும் கிடையாது என சொல்லப்படுவதுண்டு.

 Vijayakanth: Captain Vijayakanths first photo shoot photos are trending

எம்ஜிஆருக்குப் பின்னர் தன்னை பார்க்க வருபவர்களை சாப்பாடு போட்டு கவனிப்பதில் விஜயகாந்த் எப்போதுமே தனித்துவமானவர் தான். இப்போது சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும், ரசிகர்களிடம் விஜயகாந்துக்கான மவுசு கொஞ்சம் கூட குறையவே இல்லை. அவரைப் பற்றிய நினைவுகளை திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் பகிர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

 Vijayakanth: Captain Vijayakanths first photo shoot photos are trending

இந்நிலையில், விஜயகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சினிமாவில் ஹீரோவாகும் முன்னர் நடிகனாக வேண்டும் என்ற கனவுடன் விஜயகாந்த் இந்த போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மதுரையில் உள்ள ராசி ஸ்டூடியோஸில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை காத்திருந்து விஜயகாந்த் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

 Vijayakanth: Captain Vijayakanths first photo shoot photos are trending

சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி போட்டோஸ் எடுக்க வேண்டும் என விஜயகாந்த் ஆசைப்பட்டதாகவும் ராசி ஸ்டூடியோஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், அப்போதே விஜயகாந்த் ஆக்‌ஷன் லுக்கில் போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். விதவிதமான ஸ்டைலில் விஜயகாந்த் போட்டோ ஷூட் நடத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 Vijayakanth: Captain Vijayakanths first photo shoot photos are trending
 Vijayakanth: Captain Vijayakanths first photo shoot photos are trending
 Vijayakanth: Captain Vijayakanths first photo shoot photos are trending

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X