பிரேமலதா சொன்ன ஒரே வார்த்தை.. அந்தப் பழக்கத்தை நிறுத்திய விஜயகாந்த்.. என்ன தெரியுமா?
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இந்தச் சூழலில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இதனையொட்டி அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை.

கெத்து கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன்தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
உடல்நலக்குறைவு: சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார். பிறகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார்.
விஜயகாந்த் பிறந்தநாள்: இதற்கிடையே விஜயகாந்த் பலருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்த லிஸ்ட்டில் இப்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், சூர்யாகூட இருக்கிறார்கள். இன்று விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர். அவரது பிறந்தநாளில் அவரது நினைவுகளை கண்ணீரோடு நினைவுகூர்ந்துவருகிறார்கள் ரசிகர்களும், தொண்டர்களும். இந்தச் சூழலில் விஜயகாந்த் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜயகாந்த் பேட்டி: அவர் அளித்திருந்த பழைய பேட்டியில், "எனது மனைவி எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். எல்லோரும் கணவனைத்தான் கண் கண்ட தெய்வம் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு மனைவிதான் கண் கண்ட தெய்வம். என்னையும், என்னுடைய இரண்டு மகன்களையும் பத்திரமாக பார்த்துக்கொள்வது அவர் மட்டும்தான். நான் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன்.
விஜயகாந்த் நிறுத்திய பழக்கம்: சில வருடங்களுக்கு முன்பெல்லாம் எனது மகன்கள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை அடி வெளுத்துவிடுவேன். அப்போது என்னுடைய மனைவி ஒரே ஒரு வார்த்தையைத்தான் சொன்னார். அதாவது நீங்கள் ஷூட்டிங் இருக்கிறது என்று சொல்லி அடிக்கடி சென்றுவிடுகிறீர்கள். அப்படி இருக்கும்போது வீட்டில் இருக்கும் குழந்தைகளை அடித்தால் அது சரியாக இருக்குமா என்று கேட்டார். அன்றிலிருந்து அவர்களை அடிக்கும் பழக்கத்தை நான் நிறுத்திவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











