எனக்கு இன்னொருத்தி செட் ஆகமாட்டானு மனைவி சங்கீதாவுக்கு தெரியும்.. விஜய் ஓபனா சொல்லிட்டாரே

சென்னை: விஜய் தற்போது ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். ஹெச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்று கூறப்படுகிறது. இதற்கடுத்து முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் உள்ளவர்களுக்கே ஃபீலிங்கை கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் விஜய் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.

ரஜினிகாந்த்துக்கு அடுத்த இடத்தில் திரைத்துறையில் இருக்கிறார் விஜய். அவர் நடித்த படங்கள் அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கின்றன. அதுமட்டுமின்றி ரிலீஸுக்கு முன்னதாகவே படத்தின் வியாபாரம் பல கோடிகளை தாண்டுகிறது. இதன் காரணமாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் கூறினார்கள். ஆனால் ஒரே சூரியன் போன்று ஒரே சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று ரஜினியின் ரசிகர்கள் பதிலடியை தொடர்ந்து கொடுத்துவருகிறார்கள்.

Throwback Stories Vijay Sangeetha

GOAT: விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தப் படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கிய பிறகு முழுநேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார் அவர். முக்கியமாக தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவை மேடைக்கு மேடை வெளுத்து வாங்குகிறார். மேலும் விக்கிரவாண்டி மாநாட்டினை முடித்துவிட்டு பரந்தூருக்கு சென்ற அவர்; இன்னும் சில ஊர்களுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. அவரது தொண்டர்களும் விஜய் செல்லும் இடங்களுக்கு உற்சாக வரவேற்பினை கொடுத்துவருகிறார்கள்.

விஜய் மீது விமர்சனம்: அரசியலுக்கு வந்தாலே விமர்சன அம்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்கிற விதி விஜய்க்கும் பொருந்தியிருக்கிறது. அவரது அரசியல் ரீதியான செயல்பாட்டினை மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள். அதாவது திரிஷாவுக்காக தனது மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார்; குடும்பத்தையே ஒழுங்காக நடத்தாதவர் ஆட்சியை எப்படி ஒழுங்காக நடத்துவார் என்கிற பேச்சுக்களும் சமீபமாக பலமாகவே எழ ஆரம்பித்திருக்கிறது.

ட்ரெண்டாகும் விஜய்யின் பேட்டி: இந்நிலையில் தனது மனைவி குறித்து விஜய் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிற்து. அந்தப் பேட்டியில் அவர், "எனது அம்மாவுக்கு ஒரு ரசிகை கடிதம் எழுதினார். அதில், 'உங்களுடன் சேர்ந்து உங்கள் வீட்டு கிச்சனில் சமைக்க வேண்டும் என்று ஆசை' என சொல்லியிருந்தார். அவர் வேறு யாருமில்லை எனது மனைவி சங்கீதாதான். அதேபோல் எனக்கு நிறைய ரசிகைகள் மெயில், லெட்டர் போடுவதாக மிரட்டியிருக்கிறேன். ஆனால் எனக்கு வேறு யாரும் செட் ஆகமாட்டாங்க என்று சங்கீதாவுக்கு தெரியும். அந்த நம்பிக்கை நிறையவே அவரிடம் இருக்கிறது. அதனால் அவரைப் பொறுத்தவரை அந்த பயம் எல்லாம் இல்லை" என்று ஜாலியாக குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X