எனக்கு திரிஷாதான்.. நிறைய பேர் சொல்லிருக்காங்க.. விஜய் பட்டுனு போட்டு உடைச்சிட்டாரே

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அவரது கட்சி 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. இதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதனால் அவரும் அவரது ரசிகர்கல் கொஞ்சம் அப்செட் ஆகத்தான் செய்தார்கள். சூழல் இப்படி இருக்க அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். GOAT படத்தில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்துவிட முனைப்பு காட்டிவருகிறார்.

throwback stories vijay trisha

ஜன நாயகன்: ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும், முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் கடந்த குடியரசு தினத்தன்று வெளியானது. அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும்; அரசியல் ரீதியாக படம் உருவாகியிருக்கிறது என்பதை போஸ்டர்கள் உணர்த்துவதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த வருடம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரந்தூருக்கு சென்றார் விஜய். தான் ஏறும் அரசியல் மேடைகளில் எல்லாம் ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக சாடிவருகிறார். அவர் இப்படி திமுகவை சாடும்போது அவருக்கு எதிராக திமுகவினரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்கள்.

என்ன விமர்சனம்: அதாவது விஜய் தனது மனைவியை பிரிந்துவிட்டார். அதற்கு காரணம் திரிஷாதான் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு திரிஷாவும், விஜய்யும் தனி விமானத்தில் சென்றார்கள். அதை வைத்தும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்கள். ஆனால் இரண்டு பேரும் நல்ல நண்பர்கள்; வேண்டுமென்றே விஜய் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்றும் விஜய்யின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் திரிஷா குறித்து விஜய் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

விஜய்யின் பேட்டி: சில வருடங்களுக்கு முன்பு விஜய்யும், திரிஷாவும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது அவரிடம் அனுஹாசன், 'விஜய்க்கு பொருத்தமான ஜோடி யார் விஜய் - திரிஷா, விஜய் - ஜோதிகா, விஜய் - அசின்' என்று விஜய்யிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், 'எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு பொருத்தமான ஜோடி திரிஷாதான் என்று.. அதையேத்தான் நானும் சொல்கிறேன். அதுமட்டுமின்றி திரிஷாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு வேறு என்ன சொல்லமுடியும்' என ஜாலியாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X