Vikram - 20 செகண்ட் அப்படி இருங்க.. நடிகையிடம் கூறிய விக்ரம்.. நடிகை என்ன செஞ்சாங்க தெரியுமா?
சென்னை: Vikram (விக்ரம்) லைலாவிடம் பிதாமகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் சொன்ன விஷயம் குறித்து தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விக்ரம். ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவரை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஏனெனில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு முழுதாக தன்னை ஒப்படைத்துக்கொள்பவர் அவர். எனவே அவரை யாருக்குமே வெறுக்க மனது வரவில்லை.

தங்கலான்: இப்படி பலரை சம்பாத்தித்திருக்கும் விக்ரமுக்கு கடந்த சில வருடங்களாக ஹிட் படமே இல்லை. பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் ஹிட் என கூறப்பட்டாலும் அது ஒரு மல்டி ஸ்டாரர் படம் என்பதால் அந்த வெற்றியின் பங்கு முழுக்க முழுக்க விக்ரமுக்கு மட்டுமே போய் சேராது.அதன் காரணமாக சோலோ ஹிட் கொடுக்க காத்திருக்கிறார்.
தங்கலான் ஹிட்தான்: அதற்காக இயக்குநர் பா.இரஞ்சித்துடன் கைகோர்த்திருக்கிறார் அவர். தங்கலான் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பித்திருக்கின்றனர். கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட இன்னல்களை பற்றி படம் பேசுகிறது. இதன் மேக்கிங் வீடியோவை பார்த்தபோது கண்டிப்பாக விக்ரமுக்கு இந்தப் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்து மெகா ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் திட்டத்திலும் படக்குழு இருக்கிறது.
லைலாவிடம் விக்ரம் சொன்ன விஷயம்: இப்படி விக்ரம் பரபரப்பாக தங்கலானை நோக்கி காத்திருக்கிறார். விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் எந்த அளவு ரசிப்பார்களோ அதே அளவு அவரது கேரக்டரையும் ரசிப்பார்கள். எந்த ஈகோவும் இல்லாமல் எப்போதும் கலகலவென இருக்கும் விக்ரம் லைலாவிடம் ஒரு சவால் விட்டது தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது பிதாமகனில் நடித்துக்கொண்டிருந்தபோது அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் லைலா எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தாராம். அதனை பார்த்த விக்ரம் லைலாவிடம் சென்று ஒரு 20 நிமிடங்கள் சிரிக்காமல் இருங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டாராம். அதற்கு லைலாவும் ஒத்துக்கொண்டாராம். விக்ரம் கையில் டைமரோடு லைலாவுக்கு எதிரே நின்று டைமரை ஆன் செய்திருக்கிறார்.
ஆனால் லைலாவால் சில நொடிகள்கூட சிரிக்காமல் இருக்க முடியவில்லையாம். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் லைலா என்றாலே சிரிப்புதான். அவரால் எப்படி சிரிக்காமல் இருக்க முடியும் என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications