Vikram: சேது படத்தின் முதல் ஹீரோ இவரா..? நெருங்கிய நண்பனுக்கே விபூதி... சீனில் வந்த விக்ரம்!

சென்னை: 1999ம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலா.

முதல் படத்திலேயே தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்ற பாலா, விக்ரமிற்கும் தரமான கம்பேக் கொடுத்தார்.

அதுவரை பல படங்களில் நடித்திருந்த விக்ரமுக்கு, சேது தான் வெறித்தனமான கம்பேக் கொடுத்தது.

இந்நிலையில், சேது படத்தில் விஜய்க்கு முன்பு இன்னொரு முக்கியமான நடிகர் ஹீரோவாக நடிக்கவிருந்தது பலருக்கும் தெரியாது.

 Vikram: Vignesh was to act before Vikram in Sethu film.

சேது படத்தின் முதல் ஹீரோ
இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்து திரையுலகில் அறிமுகமானவர் பாலா. அவரது முதல் படமான சேது, 1999ம் ஆண்டு இறுதியில் வெளியானது. காதல் தோல்வி, காதலியின் மரணம் இரண்டையும் ஜீரணிக்க முடியாமல் காதலன் பைத்தியமாக போவது தான் கதை.

ஆட்டம் பாட்டம் என கல்லூரி வாழ்க்கையை கொண்டாடி வரும் நாயகன், காதலால் தன் வாழ்க்கையையே இழந்து நிற்பதையே சேது திரைப்படமாக இயக்கியிருந்தார் பாலா. முதலில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாத சேது, திடீரென தாறுமாறாக ஹிட் அடித்தது. அதுவரை பல படங்களில் நடித்தும் தொட முடியாத உச்சத்தை, இந்த ஒரே படத்தில் தட்டித் தூக்கினார் விக்ரம்.

முக்கியமாக இந்தப் படத்தில் நடித்தப் பிறகு தான் அவருக்கு சீயான் என பெயர் வந்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் விக்ரமிற்கு முன்னர் இன்னொரு நடிகர் தான் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். அது நடிகர் விக்னேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத் தாயி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், கிழக்குச் சீமையிலே, பசும்பொன், பொங்கலோ பொங்கல், அப்பு என பல படங்களில் நடித்துள்ளார்.

 Vikram: Vignesh was to act before Vikram in Sethu film.

முதலில் சேது படத்தில் கமிட்டான விக்னேஷ், பின்னர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் போது, அதில் ஹீரோவாக விக்னேஷ் போட்டோதான் இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இயக்குநர் பாலாவும் விக்னேஷும் ஆரம்ப காலத்தில் ஒரே அறையில் தங்கியிருந்து சினிமாவில் வாய்ப்புத் தேடியவர்கள். அப்படியிருந்தும் நண்பன் பாலாவின் சேது படத்தில் விக்னேஷ் நடிக்க முடியாமல் போயுள்ளது.

சேது மட்டும் இல்லாமல், பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்திலும் விக்னேஷ் தன் ஹீரோவாக கமிட் ஆனார். 7 நாட்கள் படப்பிடிப்பும் முடிந்த நிலையில், விக்னேஷ்க்கு பதிலாக பிரசாந்த் இந்தப் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக விக்னேஷ் நடிப்பில் ஓரளவு ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கும் படம் என்றால், அது அப்பு தான். பிரசாந்துடன் இந்தப் படத்தில் நடித்திருந்த விக்னேஷ் அதன்பின்னர் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X