ஏ.ஆர். ரஹ்மான் சொன்னதை கேட்கல.. அந்த படம் ஃபிளாப்பாக அதுதான் காரணம்.. விக்ரமன் மனம் திறந்த பேட்டி!

சென்னை: புது வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 1990ம் ஆண்டு அறிமுகமான இயக்குநர் விக்ரமன் தனது முதல் படத்தின் மூலமே தமிழ்நாட்டின் பல மாநில விருதுகளை அள்ளினார். சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப் போல, பிரியமான தோழி என விக்ரமன் இயக்கிய படங்கள் எல்லாமே தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் படங்கள் என்றே சொல்லலாம்.

இன்றும் தொலைக்காட்சிகளில் அந்த படங்களை போட்டால் புதிய படங்களை பார்ப்பது போல குடும்பத்துடன் பலரும் டிவிக்கு முன்னாடி உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். சேது படத்திற்கு முன்பாகவே சியான் விக்ரமுக்கு விக்ரமன் மூலமாக மிகப்பெரிய வெற்றி கிடைத்து இருக்கணும். ஆனால், அது நடைபெறாமல் போய் விட்டது.

vikraman ar rahman throwback

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விக்ரமன் இயக்கிய புதிய மன்னர்கள் திரைப்படம் சரியாக போகாததற்கு ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன அறிவுரையை தான் கேட்கவில்லை என பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் விக்ரமன்.

இயக்குநர் விக்ரமன்: புது வசந்தம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்து ஏகப்பட்ட குடும்பங்களை தியேட்டருக்கு வரவழைத்தார். கோகுலம், புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப் போல, பிரியமான தோழி உள்ளிட்ட படங்களை ரசிகர்கள் 100 தடவைக்கும் மேல் இன்றைக்கும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.

vikraman ar rahman throwback

நீ கட்டும் சேலை: விக்ரம், மோகினி நடிப்பில் வெளியான புதிய மன்னர்கள் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற "நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேண்டி" பாடல் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. அந்த படத்தில் வேலை செய்யும் போதே ஏ.ஆர். ரஹ்மான் செம பிசியாக இருந்தார். படத்தின் ரீ ரெகார்டிங் பணிகளை அவர் 60 சதவீதம் தான் முடித்திருந்தார். 40 சதவீதம் ரீ ரெக்கார்டிங்கை நான் அவசர அவசரமாக படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக புது வசந்தம் பிஜிஎம்மை எடுத்துப் போட்டு ரிலீஸ் செய்தேன் என பகீர் கிளப்பியுள்ளார்.

vikraman ar rahman throwback

ஏ.ஆ.ர் ரஹ்மான் சொன்னதை கேட்கல: புதிய மன்னர்கள் படத்தில் "ஒரு தென்றல் புயலாகி வருதே" என மற்ற படங்களின் பாடல்களை எல்லாம் தேவையில்லாமல் இடைச்செருகலாக வைத்திருந்தேன். அப்போதே ஏ.ஆர். ரஹ்மான் என்னிடம் சொன்னார். இந்த படம் சீரியஸான சப்ஜெக்ட். இப்படி மற்ற படங்களின் பாடல்களை எல்லாம் வைத்துவிட்டால் அந்த தாக்கம் குறைந்து விடும் என்றார். ஆனால், அப்போது அவர் சொன்னதை நான் கேட்கவே இல்லை. அதுதான் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது என மனம் திறந்து தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

vikraman ar rahman throwback

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X