குடும்பத்தோடு விஜய் எவ்வளவு ஹேப்பி பாருங்க.. மனைவி, மகள்னு க்யூட்.. மகன் சூப்பர் டான்ஸ்

சென்னை: நடிகராக பயணத்தை ஆரம்பித்த விஜய்; இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். 60 வருடங்களாக தமிழ்நாட்டில் மாறி, மாறி ஆட்சி செய்து வந்த இரண்டு கட்சிகளையும் தோற்கடித்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இருந்தாலும் அவரது குடும்ப வாழ்க்கையை நினைத்து இன்னமும் சிலர் வருத்தப்படத்தான் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் வந்த விஜய்; இப்போது தனது ரசிகர்கள், மக்களின் துணையோடு முதலமைச்சராகியிருக்கிறார். மொத்தம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை கட்சியாக தவெக மாறியது. பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை மற்ற கட்சிகள் கொடுக்க விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகிவிட்டார். அதுமட்டுமின்றி நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வென்றுவிட்டார். இதனால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த ஆட்சி கலையாது என்றே கருதப்படுகிறது.

Viral Throwback Video of Vijay With Family Leaves Fans Emotional
Photo Credit:

பெர்சனல் வாழ்க்கை: இந்தத் தேர்தலை விஜய் சந்திக்கும் முன்பு அவரது பெர்சனல் வாழ்க்கை விஷயங்கள் எல்லாம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின. முக்கியமாக அவருக்கு இன்னொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக மனைவி சங்கீதா சொன்னதுதான் ஹெட்லைன்ஸாக மாறியது. கண்டிப்பாக இந்த விஷயங்கள் எல்லாம் விஜய்க்கு பேக் ஃபயர் ஆகி; தேர்தலில் மண்ணை கவ்வப்போகிறார் என்றவர்கள்தான் மண்ணை கவ்வியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
விஜய் மீது பொறாமை இல்லை.. தொண்டர்களே, ரசிகர்களே ஜாக்கிரதையாக இருங்கள்... ரஜினி ஓபன் டாக்
விஜய் மீது பொறாமை இல்லை.. தொண்டர்களே, ரசிகர்களே ஜாக்கிரதையாக இருங்கள்... ரஜினி ஓபன் டாக்

என்ன காரணம்?: தமிழ்நாட்டு அரசியலில் ஒருவரது பெர்சனல் வாழ்க்கை இமேஜுகள் இதுவரை பெரிதாக ப்ளே செய்தது இல்லை என்பதே வரலாறு. இதற்கு முன்னதாக இம்மாநிலத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் எல்லாம் அவர்களுடைய பெர்சனல் வாழ்க்கையை வைத்து விமர்சிக்கப்பட்டார்கள்தான். ஆனால் அதையும், ஆட்சி செய்யும் திறமையையும் போட்டு மக்கள் குழப்பிக்கொள்ளவில்லை. அதுதான் இந்தத் தேர்தலிலும் நடந்திருக்கிறது. குறிப்பாக மாற்றம் தேவை என்று இருந்த அத்தனை பேரும் விசிலுக்குத்தான் தங்கள் வாக்கை செலுத்தினார்கள்.

அடுத்ததாக விசாரணை: முதலமைச்சராவதற்கு முன்பு சரி; ஆனால் முதலமைச்சரான பின்பு தன் பெர்சனல் இமேஜுகளை கொஞ்சம் சரி செய்தால்தான் இன்னும் பல வருடங்களுக்கு தமிழ்நாடு அரசியல் களத்தில் நீடிக்க முடியும் என்பது எதார்த்தம். அதை விஜய் கண்டிப்பாக செய்துவிடுவார் என்றே தெரிகிறது. அடுத்த மாதம் சங்கீதா - விஜய் விவாகரத்து மனு விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் அநேகமாக அவர்களுக்கு சட்டப்பூர்வமான விவாகரத்து கிடைத்துவிடவே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

ட்ரெண்டாகும் வீடியோ: அதேசமயம் மீண்டும் விஜய்யும், சங்கீதாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று இன்னமும் ஆசைப்படும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு விஜய், சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார்கள். அப்போது காரிலிருந்து முதலிலேயே இறங்கி சென்ற விஜய்; தன் குடும்பம் வருவதற்காக காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அங்கிருக்கும் சிறு குழந்தைகளிடம் ஜேசன் க்யூட்டாக நடனம் ஆடி காண்பிக்க அதனை விஜய்யும், சங்கீதாவும் மகிழ்ச்சியோடு ரசித்தார்கள். இதை பார்த்த ரசிகர்களோ எப்படியெல்லாம் இருந்திருக்காங்க ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X