வடிவேலுவை மனம் திறந்து பாராட்டிய விவேக்கின் பழைய டிவிட்டர் பதிவு.. இந்த மனசு யாருக்கு வரும்!

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. நடிகர் விவேக் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் நல்ல மனிதராகவும் வாழ்ந்தவர். இதனாலேயே திரைத்துறையில் அவரை சின்னக் கலைவாணர் என்று அழைத்தார்கள். அதற்கு இன்னொரு காரணம் தனது நகைச்சுவை மூலம் மக்களுக்கு பகுத்தறிவை, பொது அறிவை கொண்டு சேர்த்தவர். இவர் தனது சக போட்டியாளர் வடிவேலு குறித்து மனம் திறந்து பாராட்டி, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் வடிவேலுவும் விவேக்கும் சம காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக கலக்கியவர்கள். இவர்கள் இருவரும் இணைந்தும் படங்களில் நடித்துள்ளார்கள். தொழிலில் இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். விவேக் குறித்து வடிவேலு புகழ்ந்து பாராட்டி பேசுவதும் வடிவேலு குறித்து விவேக் புகழ்ந்து பாராட்டி பேசுவது என அவர்கள் நட்புக்கு பலரும் ரசிகர்கள்.

இப்படியான நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி நடிகர் விவேக், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொரோனா காலகட்டத்தில் அவர் மறைந்ததால் பலரும் அவரது மறைவுக்கு சென்று துக்கம் விசாரிக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் நடிகர் வடிவேலு துக்கம் விசாரிக்க வரவில்லை. பலரும் இது தொடர்பாக வடிவேலுவை காட்டமாக விமர்சித்தனர்.

Vivek Praised Vadivelu On His X Page Old Post Goes Trending Throwback

வடிவேலு: ஆனால், விவேக் இறந்ததும் வடிவேலு ஒரு வீடியோ வெளியிட்டார். அதாவது, விவேக்கின் மரணம் தொடர்பாக மிகுந்த வேதனையுடனும் கண்ணீருடனும் அந்த வீடியோவை வடிவேலு வெளியிட்டார். ஆனாலும் வடிவேலு நேரில் சென்று துக்கம் விசாரித்து இருக்க வேண்டும் என பலரும் விமர்சித்தார்கள். இது தொடர்பாக வடிவேலு அண்மையில் அளித்த பேட்டியில், விவேக் இறப்பான் என்று நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. அவன் மறைவுக்கு என்னால் செல்ல முடியாத மோசமான நிலையில் இருந்தேன். அதன் பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து விசாரித்தேன் என வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.

விவேக்: வடிவேலுவின் இந்த பேட்டி வேகமாக பரவிக் கொண்டிருக்கும் போது, மறைந்த நடிகர் விவேக் வடிவேலு குறித்து பாராட்டி புகழ்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பழைய ட்வீட்டை இணையவாசிகள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். அதாவது விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், " உண்மை. வடிவேலுவை போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!!" என வடிவேலுவைப் பாராட்டி பகிர்ந்துள்ளார்.

மீம் கிரியேட்டர்கள்: அவர் கூறியதை போல் மீம் கிரியேட்டர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது என்றால் அது வடிவேலுதான். அவரது பல டெம்ப்ளேட்கள் இப்போதும் மீம்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு கூட அவரது பழைய டெம்ப்ளேட்கள் பயன்படுகிறது. இப்படியான நிலையில் தான் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி வடிவேலு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார் விவேக். வடிவேலுவைப் பாராட்டியதற்கு இணையவாசிகள் பலரும் விவேக்கை பாராட்டினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X