ரஜினி பட இசை வெளியீட்டு விழா.. வடிவேலுவுக்கும், விவேக்குக்கும் முட்டிக்கொண்டதா?
சென்னை: வடிவேலுவும், விவேக்கும் தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு லெஜண்ட் காமெடியன்களாக பார்க்கப்படுபவர்கள். இரண்டு பேரும் சேர்ந்து விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்க்ள். இரண்டு பேரில் விவேக் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். வடிவேலுவும் ஒரு கேப்புக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டின் காமெடி நடிகர்களுக்கென்று தனி வரலாறு உண்டு. நாகேஷுக்கு பிறகு வந்தவர்க்ளில் கவுண்டமணி, செந்தில் ஆகியோர் தமிழ் சினிமா காமெடியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் வடிவேலு, விவேக் ஆகியோரும் சினிமாவில் நடிக்க வந்தார்கள். காலம் செல்ல செல்ல இவர்கள் இரண்டு பேரும் தங்களுக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு காமெடி செய்ய ஆரம்பித்து மார்க்கெட் வேல்யூவை உயர்த்தினார்கள்.
இரண்டு பேரும் சேர்ந்து: பொதுவாக திரைத்துறையில் போட்டியும், பொறாமையும்தான் அதிகம் இருக்கும் என்று பலர் சொல்வார்கள். அரிதிலும் அரிதாகத்தான் இரண்டு நடிகர்கள் எந்த் ஈகோவும் இல்லாமல் பழகி ஒரே படத்தில் தொடர்ந்து நடிப்பார்கள். அப்படித்தான் வடிவேலுவும், விவேக்கும். இருவரும் சேர்ந்து விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள்.
நல்ல நட்பு: ஒரே காலத்தில் அவர்கள் நடிக்க வந்த காரணத்தாலும், ஈகோ கம்மியாக இருந்ததாலும், ஒன்றாக பணியாற்றியதாலும் அவர்கள் இரண்டு பேருக்கும் கடைசிவரை நல்ல நட்பு இருந்ததாகவே பலரும் சொல்வார்கள். அதனை அவர்களும் பேட்டிகள் மற்றும் மேடையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு விவேக் உடல்நல குறைவால் உயிரிழந்தார். ஆனால் அவரது உயிரிழப்புக்கு வடிவேலு வரவில்லை.

சுற்றிய சர்ச்சைகள்: விவேக் உயிரிழப்புக்கு வடிவேலு வராதது அந்த சமயத்தில் பெரிய சர்ச்சையையும், விமர்சனத்தையும் உண்டு பண்ணியது. அதேசமயம் கொரோனா காலகட்டத்தில் விவேக் உயிரிழந்ததால்தான் வடிவேலுவால் வர முடியவில்லை என அவரது ரசிகர்களும் சொல்வார்கள். இதற்கிடையே வடிவேலுவை சுற்றி மற்ற பஞ்சாயத்துக்களும் அப்போது ஓடிக்கொண்டிருந்தன. ஒருவழியாக அவை அனைத்தும் முடித்து வைக்கப்பட்டு இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
எந்திரன் இசை வெளியீட்டு விழா: இந்நிலையில் விவேக் உயிரோடு இருந்தபோது கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் வடிவேலு குறித்து பேசிய அவர், "எனக்கும் வடிவேலுவுக்கும் மோதல் எல்லாம் வந்தது இல்லை. எந்திரன் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது, 'என்ன நேத்து நைட்டே ஸ்க்ரிப்ட்டை எழுதி வாங்கிட்டியா' என்று கேட்டேன். அதற்கு அவரோ, 'டேய் டேய் அதெல்லாம் இல்ல.எல்லாம் உள்ளிருந்து வருகிறது' என்று கூறினார். அநேகமாக நான் அப்படி சொன்னதை மட்டும்தான் அவர் தவறாக எடுத்துக்கொண்டிருக்கக்கூடும். மற்றபடி எங்களுக்குள் மோதல் எல்லாம் வந்ததில்லை" என்றார்.
விவேக்கின் இந்தப் பேட்டி திடீரென சமூக வ்லைதளங்க்ளில் ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும் விவேக் இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம் என்றும் வருத்தத்தோடு ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
வடிவேலுவின் படங்கள்: வடிவேலு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். அவர் கடைசியாக நடித்த கேங்கர்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய நான்கு படங்களில் மாமன்னன் மட்டுமே வெற்றியடைந்தது. அடுத்ததாக அவர் ஃபகத் பாசிலுடன் மாரீசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











