அதெல்லாம் செய்ய முடியாது.. ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை.. இப்படி வேற நடந்திருக்கா?
சென்னை: ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வயதாகிவிட்டாலும் அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் இன்னும் குறையாததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். அவருடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிடமாட்டோமா என்று பலரும் ஏங்குகிறார்கள். ஆனால் அவருடன் ஒரு நடிகை நடிக்க மறுத்த விஷயம் தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இதுவரை 170 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களே. இடையில் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்து ட்ரோல்களையும், விமர்சனத்தையும் பெற்றன. இதனால் அவரும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட் ஆகினர். மேலும் இத்தனை வருடங்களாக ரஜினி வசம் இருந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி அவரிடமிருந்து சென்றுவிடுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

தட்டி தூக்கிய ஜெயிலர்: ஆனால் அந்த சீன்லாம் இல்லை என்று ஜெயிலர் படம் உணர்த்தியது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினிக்கு ஏற்றபடி சீன்கள், திரைக்கதை என ஒவ்வொரு விஷயத்தையும் நெல்சன் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். இதன் காரணமாக படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
வேட்டையன்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் லைகா தயாரிப்பில் கமிட்டானார் ரஜினி. அதன்படி லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்று நடித்தார். படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. ஜெயிலரில் பிடித்ததை இதில் விட்டுவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் ஏக்கமடைந்திருக்கின்றனர். இருந்தாலும் ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்துவரும் வேட்டையன் படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
பட்டையை கிளப்புவார்: ஞானவே இயக்கிய முதல் படமான ஜெய் பீம் பெரும் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த்துக்காக இயக்குநர் தரமான சம்பவம் செய்வார் என்று கூறும் ரசிகர்கள்; இது கமர்ஷியல் படமாக இருந்தாலும் கண்டிப்பாக மக்களுக்கும், சமூகத்துக்கு தேவையான கருத்தைத்தான் சொல்லும்வகையில் அமைந்திருக்கும் என்கின்றனர். படத்தின் டைட்டில் டீசர் நல்ல வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 171: வேட்டையன் படத்தை முடித்துவிட்டு தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார் ரஜினி. அதனை கோலிவுட்டின் இப்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. எனவே அதனை இதில் போக்கும் விதமாகவும்; கமல் ஹாசனுக்கு விக்ரம் படத்தை வைத்து எப்படி பிரமாண்ட வெற்றியை கொடுத்தோமோ அதேபோல் ரஜினிக்கும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது டீமுடன் படத்துக்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
நடிக்க மறுத்த நடிகை: ரஜினிகாந்த்துடன் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். ஆனால் அவருடன் நடிக்க மறுத்த நடிகை குறித்து தெரியவந்திருக்கிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை வைஜெயந்தி மாலா. வைஜெயந்தி மாலா பழம்பெரும் நடிகை ஆவார். ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த அவருக்கு ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு இல்லை. அந்தச் சமயத்தில் ரஜினிகாந்த் மாப்பிள்ளை படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
அப்படத்தில் ரஜினிக்கு மாமியார் வேடத்தில் நடிக்க முதலில் வைஜெயந்தி மாலாவிடம்தான் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாம். ஆனால் அந்தக் கேரக்டருக்கும், ரஜினிக்கும் கதைப்படி தொடர்ந்து மோதல் நிகழ்ந்த்கொண்டே இருக்கும். எனவே ரஜினிகாந்த்தை திட்டுவதுபோல் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி அந்தப் படத்தை ஒத்துக்கொள்ளவில்லையாம். பிறகுதான் அவருக்கு பதிலாக ஸ்ரீவித்யா அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாராம். இதனை வைஜெயந்தி மாலாவே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications