Rajinikanth - எப்படிப்பட்ட கிளாஸிக் பாட்டு அது.. வேண்டாம் என்ற ரஜினி.. மீறிய இளையராஜா.. செம சம்பவம் உள்ளே
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) இன்றுவரை கொண்டாடப்படும் ஒரு பாடலை ரஜினி வேண்டாம் என்று சொல்லிய சம்பவம் குறித்து இதில் பார்க்கலாம்.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். அவரது நடை, உடை, ஸ்டைல் என அனைத்திலும் தனக்கென தனி பாணியை உருவாக்கி வைத்து பெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைத்திருப்பவர். சினிமாவில் ஒருவர் நடிக்க ஆசைப்பட்டால் அவரை அறியாமலேயே ரஜினிகாந்த் மாதிரி வந்துவிட வேண்டும் என்றே நினைப்பார். அந்த அளவுக்கு அவரது தாக்கல் பலரிடம் நிறைந்திருக்கிறது.

ஜெயிலர்: ரஜினிகாந்த் எத்தனையோ மெகா ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் கடைசி சில வருடங்களாக அவரால் ஹிட் கொடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலர் படம் வெளியாகி மெகா ஹிட்டானது. அதனையடுத்து தற்போது அவர் தனது 170ஆவது படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
பாடல்கள்: ரஜினி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பதற்கான பல காரணங்களில் ஒரு காரணம் அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்கள். அவருக்கென்று எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் என பலரும் தரமான பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். எம்ஜிஆர் எப்படி தான் தோன்றிய பாடல்கள் மூலம் தத்துவங்கள் சொன்னாரோ அதேபோல்தான் ரஜினிகாந்த்தும் தத்துவங்களை கூறினார். எம்ஜிஆருக்கு எப்படி வாலியோ அதுபோல் ரஜினிகாந்த்துக்கு வாலி, வைரமுத்து என்பது பலரது கருத்து.

அம்மா பாடல்: அப்படி ரஜினிகாந்த் தோன்றிய பாடல்களில் முக்கியமான பாடல் என்றால் மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா என்று அழைக்காத உயிரில்லையே பாடல். அந்தப் பாடல் இன்றுவரை பலரது ஃபேவரைட். இளையராஜா இசையமைக்க வாலி எழுத யேசுதாஸ் பாடியிருந்தார். க்ளாஸிக் பாடலான அந்தப் பாடல் தமிழ்நாட்டில் பல கோயில்களில் கல்வெட்டாக இடம்பெற்றிருக்கிறது.
வேண்டாம் என்ற ரஜினிகாந்த்: இந்த சூழலில் அந்தப் பாடலை வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. மன்னன் படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். இந்தப் பாடலுக்கான சிச்சுவேஷனை வாசு முதலில் யோசிக்கவே இல்லையாம். இப்படி ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்கும் என இளையராஜா கூற பி.வாசு ஒத்துக்கொண்டாராம்.
பாடல் பதிவு எல்லாம் முடிந்த பிறகு பாடலை கேட்ட ரஜினிகாந்த் இந்தப் பாடல் வேண்டாம். ரொம்பவே ஸ்லோவாக இருக்கிறதே என்று கூற. இளையராஜாவோ இல்லை இந்தப் பாடல் இருக்கட்டும். கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் பாருங்கள் என்று கூறியிருக்கிறார். அப்படித்தான் அந்தப் பாடல் மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்றதாம். இதனை இயக்குநர் நந்தகுமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











