ஜெயலலிதா நீங்கள் செய்தது தப்பு.. சொடுக்கு போட்டு அடக்கிய ரஜினிகாந்த்.. தலைவரின் தரமான சம்பவம் தெரியுமா?

சென்னை: இந்திய சினிமாவின் அடையாளம் ரஜினிகாந்த். 75 வயது ஆனாலும் இன்னமும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான கூலி படம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக் ஜெயிலர் 2, தலைவர் 173, KHXRK ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. மூன்று படங்களும் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் திமுகவின் மிரட்டலால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா சொன்னதையடுத்து; சூப்பர் ஸ்டாரின் பழைய சம்பவங்கள் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளன.

ரஜினிகாந்த்துக்கு இப்போது 75 வயது ஆகிறது. ஆனாலும் அசராமல் நடித்துவருகிறார். அவரது உழைப்பை பார்த்து அனைவருமே பிரமித்து போயிருக்கிறார்கள். இப்படி தனது கரியரிலும், குடும்பத்திலும் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார் சூப்பர் ஸ்டார். ஆனால் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவோ, 'திமுகவின் மிரட்டலுக்கு பயந்துதான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. அந்த மிரட்டலை தாங்குவதற்கு அப்போது அவருக்கு மன வலிமை இல்லை' என போகிறபோக்கில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு சென்றார்.

When Rajinikanth Snapped Fingers at Jayalalithaa on Stage Viral Throwback Amid New Controversy
Photo Credit:

வலுக்கும் கண்டனங்கள்: ஆதவ் அப்படி பேசியதற்கு கடும் கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. நக்கீரன் கோபால், திருமாவளவன், சூப்பர் சுப்பு மற்றும் ரஜினியின் ரசிகர்கள் எல்லாம் ஆதவ்வையும், விஜய்யையும் வெளு வெளு என்று வெளுத்துவருகிறார்கள். இப்போது வேண்டுமானால் ரஜினி ரொம்பவே பக்குவமாக தான் உண்டு தனது வேலை, குடும்பம் உண்டு என்று இருக்கலாம். ஆனால் 90களில் எல்லாம் அவரது ரேஞ்சே வேறாக இருந்தது. எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் தனது மனதில் பட்டதை பேசிவிடுவார்.

எக்கச்சக்க பிரச்னைகள்: அதன் காரணமாக எக்கச்சக்க பிரச்னைகளையும் அவர் சந்தித்திருக்கிறார். குறிப்பாக அரசியல் தலைவர்களில் அவருக்கும், ஜெயலலிதாவுக்கும்தான் ஏழாம் பொருத்தமாக இருந்தது. இரண்டு பேரும் போயஸ் கார்டன்தான். அப்போதே பிரச்னை ஆரம்பித்துவிட்டது. அதற்கு பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட செவாலியே விருது விழாவில் இந்தப் பிரச்னை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது என்றே சொல்லலாம். அப்போதைக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read
வைரமுத்துவை பாராட்டிய ரஜினிகாந்த்.. சின்மயி இப்படி ஒரு ரியாக்‌ஷனை கொடுத்துட்டாங்களே.. என்ன தெரியுமா?
வைரமுத்துவை பாராட்டிய ரஜினிகாந்த்.. சின்மயி இப்படி ஒரு ரியாக்‌ஷனை கொடுத்துட்டாங்களே.. என்ன தெரியுமா?

என்ன நடந்தது?: அதாவது எல்லோரும் வந்து அமர்ந்த பிறகு சிவாஜி வர வேண்டும்; எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும் என்பது ரஜினியின் பிளான். ஆனால் ஜெயலலிதா அந்த விழாவுக்கு தாமதமாக வந்தார். அதுவே ரஜினிக்கு பிடிக்கவில்லை. தொடர்ந்து அவர் வாழ்த்துரை வழங்க வேண்டும் என பணிக்கப்பட்டது. அவரோ நான் நன்றியுரை சொல்லிக்கொள்கிறேன் என கூறிவிட்டார். கடைசியாக மைக்கை பிடித்த ரஜினி, 'சிவாஜியை பாராட்டும் விதமாக அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மரியாதை செய்யுங்கள்' என சொல்ல; வேறு வழியில்லாமல் ஜெவும் எழுந்து நின்றார்.

சொடுக்கு போட்ட ரஜினி: அதனையடுத்து பேச ஆரம்பித்த அவர், ஜெயலலிதாவை நோக்கி சொடுக்கு போட்டு, "நீங்கள் திறந்து வைத்தீர்களே ஃபிலிம் சிட்டி. அப்போதே சிவாஜி சாரை அழைத்து அந்த மேடையில் அமர வைத்து கௌரவம் செய்திருக்க வேண்டும். நீங்கள் அதை செய்யவில்லை. அவரை மதிக்கவில்லை. அதை செய்யாதது தப்பு. தப்பு செய்வது மனித இயல்பு. தப்பை திருத்திக்கொள்வது மனிதத்தனம். அப்போது செய்த தவறை நீங்கள் இப்போது சரி செய்துவிட்டீர்கள். இப்படி ஒரு பிரமாண்டமான விழா நடத்துவதற்கு உதவி செய்து சரி செய்துவிட்டீர்கள். தவறு யார் செய்தாலும் தவறு என்றுதான் சொல்வேன். அது ஒரு குடிமகனின் உரிமை. நடிகன் என்ற முறையில் திரைத்துறையில் நடப்பதை கேட்கவும், பேசாவும் எனக்கு நிறையவே உரிமை இருக்கிறது" என கூறினார். இப்படி ஜெயலலிதாவையே சொடுக்கு போட்டு பேசிய ஒரு நபர் இருப்பார் என்றால் அது ரஜினி மட்டும்தான். ஆனால் அவருக்குத்தான் பயம், மன வலிமை இல்லை என ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். எல்லாம் கொடுமை..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X