டக்கென மீனா வீட்டிற்குச் சென்ற விஜய்.. கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அப்படி இருந்துச்சாம்!

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் குறித்த தகவல்களை ரசிகர்கள் தேடித் தேடி தெரிந்து கொண்டு வருகிறார்கள். விஜய் குறித்த பாசிட்டிவான தகவல்களை இணையத்தில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து விஜய்க்கு தேர்தலில் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை மீனா அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது நடிகர் விஜய் மற்றும் மீனா இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், கதை மற்றும் தேதிகள் சரியாக அமையாமல் போனதால் இருவரும் இணைந்து பணியாற்ற முடியவில்லை. ஷாஜகான் படத்தில் சரக்கு வெச்சு இருக்கேன் என்ற ஒரு குத்து பாடலுக்கு மட்டும் நடிகை மீனா விஜய் உடன் இணைந்து நடனமாடி உள்ளார். இந்த பாடலுக்கு இப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த அளவுக்கு துள்ளலான பாடல் இது. மீனா நடிக்கவில்லை என்றாலும் அவரது மகள் நைனிகா விஜய்யின் மகளாக தெறி படத்தில் நடித்துள்ளார்.

When Vijay Interviewed Meena at Her Peak Actress Reveals a Surprising Memory - Throwback

பேட்டி எடுத்த விஜய்: இப்படி இருக்கையில் நடிகை மீனா அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, விஜய் ஒரு பத்திரிகையின் சார்பாக என்னை பேட்டி எடுக்க வீட்டிற்கு வந்தார். அது எந்த பத்திரிகை என்பதை மறந்துவிட்டேன். அதேபோல், அவரது கேள்விகளையும் என்னால் உடனே நினைவு கூற முடியவில்லை. ஆனால் அந்த பேட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த பேட்டிக்காக விஜய் எனது வீட்டிற்கே வந்தார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

When Vijay Interviewed Meena at Her Peak Actress Reveals a Surprising Memory - Throwback

விஜய்: நடிகர் விஜய் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவரது கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மொத்தம் 232 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் தேர்தலை சந்திக்கும் அவரது கட்சி, ஆட்சியைப் பிடிப்பதற்கான 118 என்ற மேஜிக் நெம்பரை வெல்லுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X